Daily Archives: ஜூன் 11th, 2017

புத்தம் புது காலை பொன்னிற வேளை

காலையில் எழுந்ததும் ஃப்ரெஷ்ஷாக, நிம்மதியான மனநிலையில் இருந்தால், அன்றைய நாளே அழகாகிவிடும். ஒரு முழு நாளையும் அழகானதாக மாற்றுவதற்கான அஸ்திவாரம் உங்களுடைய காலைப்பொழுதே.! அந்தக் காலைப் பொழுதில் நாம் சில பழக்கங்களைப் பின்பற்றினால், அந்த நாள் முழுவதுமே மகிழ்ச்சி தருவதாக அமையும்.

 

அப்படிச் சில பழக்கங்களை இங்கே பார்ப்போம்…

Continue reading →

குழந்தைகளை தாக்கும் குளிர்கால சவால் இது!

அனைவரையும் படாதபாடுபடுத்தி வந்த, வெயில்காலம் விடைபெற்று விட்டது. தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இடையிலும், குழந்தைகளை கடும் நோய்கள் தாக்காதவாறு பார்த்துக் கொண்ட பெற்றோர்களுக்கு, இனிதான் இருக்கிறது சவால். வெயில் காலத்தை விட, மழை காலத்தில்தான் குளிர்கால நோய்கள் குழந்தைகளை அதிகளவில் தாக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், பள்ளி துவங்கி விட்டால், பிற மாணவ மாணவியரிடம் இருந்து, வைரஸ் தொற்று ஏற்பட்டு விடும்.

Continue reading →

135 பேர் யார் எந்தப் பக்கம்?

டெல்லி திகார் சிறையில் இருந்து திரும்பிய தினகரனுக்கு அ.தி.மு.க-வில் கிடைத்திருக்கும் வரவேற்பு, எடப்பாடி அணிக்கு அதிர்ச்சி தந்துள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்தபோது, தினகரனை அடுத்த 60 நாள்களுக்குப் பொறுமை காக்கும்படி அட்வைஸ் செய்து அனுப்பியிருந்தார். ஆனால், தினகரன் பொறுமை காக்கவில்லை. அடுத்தடுத்து, எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டார். இதுவரை அவரை வீடு தேடிப் போய் சந்தித்த எம்.எல்.ஏ-க்கள் 32 பேர். ‘இத்தனை எம்.எல்.ஏ-க்கள் எப்படிப் போனார்கள்? யார் லாபி செய்தது? உளவுத்துறை எப்படிக் கோட்டை விட்டது?’ என்கிற கேள்விகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களிடம் கேட்டு வருகிறார். வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் என மூன்று பேருடன் ஆரம்பித்த ஆதரவுப் பட்டியல் 32 பேர் வரை நீண்டுவிட்டது. ஆட்சியையே அசைத்துப் பார்க்கும் வல்லமையோடு தினகரன் அணி பலமடைந்திருப்பது யாரும் எதிர்பார்க்காத திருப்பம்தான்.

தினகரனின் உளவு அமைச்சர் யார்?

Continue reading →