Advertisements

மன அழுத்தத்தை விரட்டி அடியுங்கள்!

அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். பணிச்சூழல், வீட்டில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால், மன அழுத்தம் தாக்குவதால், பலரும் தவிக்கிறார்கள். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, உளவியல் வல்லுனர்கள் கூறுவது என்ன?

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக, சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேர பதட்டத்தில், எது தவறு, எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது, பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்து வரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவி விட்டு, பதட்டம் தணியும் வரை பொறுமையாய் இருந்தால், ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.
எதையும் எளிதாக செய்ய முடியும் என்ற, தன்னம்பிக்கை இருந்தாலும் கூடுதல் பாரங்கள், மன அழுத்தத்தை வளர்த்து விடும். எல்லோரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம் என்பதால், செய்ய முடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும், நாசூக்காக மறுத்து விடுவது நல்லது.
அமைதியான இடத்தில் அமர்ந்து, கற்பனையாய் சிந்திப்பது பலனளிக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். அடைந்து கிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி, திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள் முடங்கிக் கிடக்காமல், வெளியே வந்து, ஆகாயத்தில் அலையலையாய்ப் போகும் மேகங்களை பார்ப்பது, பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.
எத்தகைய பதட்டத்தையும் தணித்து, அமைதிப்படுத்தும் சக்தி, இசைக்கு உண்டு. இசையை கேளுங்கள் அல்லது வாய்விட்டுப் பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும். நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை நுகர்வதன் மூலம், மனதை மிக விரைவில் லேசாக்கி கொள்ளமுடியும்.
வைட்டமின் பி, மற்றும் கால்சியம் அடங்கிய சத்துள்ள உணவுகளை உண்பவர்கள், எளிதாக மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை தின்றால், அதிலுள்ள செரிடானின், உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நெஞ்சில் ஏதாவது எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால், கொஞ்ச தூரம் நடந்து செல்வது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில், அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் தரும். மனதில் தோன்றும் கவலைகள், எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க, சில மணி நேரம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தில் கவலைகளை ஆராய்ந்து, அவற்றை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது.
பதற்றமான சூழலில் நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் மனம் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.
மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம், மன அழுத்தத் தை விரட்டியடிக்கும் வல்லமை கொண்டவை என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: