Advertisements

ஹெல்த்தியா ப்ரஷ் பண்ணுங்க!

தினமும் செய்கிற வேலைதான். ஆனாலும், அதிலும் ஆரோக்கியம் பழகுவது எப்படி என்று தெரியுமா?பல் துலக்கும் சரியான முறை, ப்ரஷ்ஷைப் பயன்படுத்தும் முறை உள்பட சகல விஷயங்களையும் விளக்குகிறார் பல் மருத்துவர் சக்திவேல் ராஜேந்திரன்.
ஏன் பல் துலக்க வேண்டும்?

‘‘நாம் உண்ணும் உணவு நம் பற்களின் இடையில் தங்கும்போது கழிவாக மாறி அங்கு நுண்கிருமிகள் வளர்கின்றன. இதில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் ஈ-கோலி பாக்டீரியாவும், சருமத் தொற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டாபில்கோலி பாக்டீரியாவும் அடக்கம். இந்த நுண்கிருமிகள் தொடர்ந்து பற்களிலேயே இருந்தால் அநேக நோய்கள் தோன்றுகின்றன. அதனால் பல்துலக்குவது அவசியமாகிறது.’’
எந்த வயதில் தொடங்குவது?
‘‘பொதுவாக இரண்டு வயதுக்குப்பிறகே பல்துலக்கத் துவங்குகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு பல் முளைத்த உடனேயே பல்துலக்கக் கற்றுக் கொடுப்பது மிகவும் நல்லது.  இதற்குக் காரணம், குழந்தைகளுக்கு பாட்டில் மூலம் புட்டிப்பால் கொடுக்கும்போது பல்நோய்கள் உருவாக வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளுக்கு பல்துலக்கும் முறை தெரிய வாய்ப்பில்லை என்பதால் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் பல்துலக்கிவிடுவது சிறந்தது.’’
எவ்வளவு நேரம் பல் துலக்கலாம்?
‘‘பல் மருத்துவ முறையின்படி 2 : 2 : 2 என்ற அளவினை பல் துலக்குவதில் கைக்கொள்ள வேண்டும். அதாவது, ஒரு நாளைக்கு 2 முறை : 2 நிமிடங்கள் பல்துலக்க வேண்டும். வருடத்துக்கு 2 முறை பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனபதே இத்திட்டம்.’’பல்துலக்குவதற்கான சரியான முறை எது?
‘‘கடைவாய்ப் பற்களில் இருந்து பல்துலக்க ஆரம்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் மொத்தப் பற்களையும் துலக்கிய திருப்தி கிடைக்கும். கீழ்வரிசை மற்றும் மேல்வரிசைப் பற்களை ஒட்டியடி துலக்கும்போது நுண்கிருமிகள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே மறைந்திருக்கும். எனவே, மேல்வரிசைக்கும் கீழ்வரிசைக்கும் இடைவெளிவிட்டு துலக்கும்போது கழிவுகள் வாய்க்குள் சென்றுவிடும், அவை பின்னர் வாய்க்கொப்பளிக்கும்போது வெறியேறிவிடும்.அதேபோல இரவு தூங்கும் முன்னர் பல்துலக்குவதும் அவசியம். தூங்கும்போது நமது உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகள் முற்றிலும் நிறுத்தப்படுவதால் பல் இடு்க்கில் ஒட்டியுள்ள நுண்ணுயிரிகள் பலமடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, இரவு பல்துலக்குதல் நல்லது.’’எந்த மாதிரியான டூத் ப்ரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டும்?
‘‘மிருதுவான பல்துலக்கியே பற்களின் இடையில் உருவாகி உள்ள நுண்ணுயிரிகளை அகற்ற உகந்ததாகும். 2 வயதுக்கும் குறைவான குழந்தைகள் Finger Brush கொண்டு பல்துலக்கலாம். இத்தகைய பல்துலக்கிகளை பெற்றோர் தனது விரலுக்குள் செலுத்தி குழந்தைகளுக்கு பல்துலக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மிருதுவான பல்துலக்கிகளை உபயோகிக்கலாம்.இவர்களும் பெற்றோரின் கண்காணிப்பில் பல்துலக்கப் பழக்கிட வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே பல் துலக்கலாம். பல் வரிசையை சீராக்குவதற்கு பொருத்தப்படும் Clip பொருத்தி உள்ளவர்கள், அதற்கென உள்ள ஸ்பெஷல் ப்ரஷ்ஷைப் பயன்படுத்த வேண்டும். பற்களுக்கு இடையே பின்புறத்தில்தான் அதிக அளவு கிருமிகள் இருக்கும். இவைகளை நீக்க Interdental Brushes எனப்படும் பல்லிடுக்கு பல்துலக்கிகளைப் பயன்படுத்தலாம்.
நிரந்தரப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு Toothette எனப்படும் பிரத்யேக பல்துலக்கி  உதவியாக இருக்கும். இவ்வகைத் துலக்கிகளில் பஞ்சு(Sponge) ஒரு கைப்பிடியுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல மின் இயக்கி மூலம் செயல்படும் பல்துலக்கி தற்போது அறிமுகமாகி உள்ளது. அதிக முயற்சி இன்றி மின் பல்துலக்கி பற்களின் எல்லா இடங்களிலும் உள்ள கழிவுகளை நீக்கி செயல்படுகிறது.’’
டூத் பிரஷை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்?
‘‘பல்துலக்கி ஒரேநேர முதலீடு அல்ல. பல்துலக்கியின் பிரிஸில்கள் தேய்ந்து(Bristles) மடிந்துவிடும்போது புதிய பல்துலக்கியை மாற்றிவிட வேண்டும். தோராயமாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.’’தவறான டூத் பிரஷ்ஷைத் தேர்ந்தெடுத்தால் என்ன பிரச்னை வரும்?‘‘அதிக கடுமையான மிகவும் விரைப்பான அவயங்கள்(Brush bristles) உள்ள பல்துலக்கிகளை உபயோகிப்பதால்  செர்விகல் அப்ரிஷன்(Cervical apration) என்ற நோய் உருவாக ஏதுவாகிவிடும்.’’டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்த ஒரு முக்கியமான டிப்ஸ்?
‘‘கழிப்பிடத்துக்குப் பக்கத்திலேயே வீடுகளில் குளியலறையும் உள்ளது. இதனால், அங்குதான் பல்துலக்கிகளை வைக்கிறோம். இப்படி வைக்கும்போது கழிப்பறைக் கிருமிகள் காற்றின் மூலம் பல்துலக்கியில் வந்து தங்கிவிடுகின்றன. எனவே, கழிப்பறையில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளிவைக்க முடியுமோ அவ்வளவு தூரத்தில் தள்ளிவைப்பது நல்லது.இதேபோல், ஒரே பெட்டியில் அனைத்து பல்துலக்கிகளையும் வைக்கும்போது ஒருவருக்கு உள்ள நோய்க்கிருமி இன்னொருவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, பல்துலக்கியதும் நன்றாக கழுவி வெயிலில் உலரவைத்து தனித்தனியாக வைப்பதே நல்லது.’’

Advertisements
%d bloggers like this: