Advertisements

தொப்புன்னு விழுந்திடிச்சா தொப்பை? பயந்துடாதீங்க, குறைச்சுக்கலாம்!

இந்திய ஆண்களின் தேசிய பிரச்னையே இதுதான். சில பெண்களுக்கும். தொப்பை இல்லாத நடுத்தர வயதினரை விரல் விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறது. நவீனவாழ்க்கைமுறையின் லைஃப் ஸ்டைல் பிரச்னைகள் பலவற்றுக்கும் தொப்பைதான் தோற்றுவாய் என்கிறார்கள் மருத்துவர்கள்.பழைய சோறும், பச்சைமிளகாயும், கம்பங்

கூழும், கருவாட்டுக் குழம்புமாக நம் முன்னோர் உண்டுவிட்டு காட்டிலும் மேட்டிலும் உழைத்துக் கொண்டிருந்த காலத்தில் சிக்ஸ்பேக் கட்டழகு இல்லையென்றாலும், காண்பவரை கவரும் நாட்டுக் கட்டைகளாகதான் தோற்றம் அளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தொப்பையும் இல்லை. தொல்லையும் இல்லை.
மூன்று வேளை அரிசி உணவு. இடையிடையே நொறுக்குத்தீனி. சாயங்காலத்தில் லைட்டாக பசிக்கிறது என்று ஜங்க் ஃபுட். வீட்டை விட்டே வெளியே இறங்கினாலே டூவீலர், கார். அலுவலக ஏசியில் அமர்ந்தபடியே வேலை. விடிய விடிய டிவி. இன்டர்நெட், மொபைல் என்று மாறிவிட்டது நம்லைஃப் ஸ்டைல்.முன்பெல்லாம் நாற்பது பிளஸ் அங்கிள்களுக்குதான் தொப்பை இருக்கும். இப்போது இருபது களில் இருக்கும் இளைஞர்களே தொப்பையும், தொந்தியுமாக குட்டி யானை மாதிரி திரிகிறார்கள். தொப்பையைக் குறைக்க ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஏதேதோ டயட் முறைகள், உடற் பயிற்சிகள் என்றெல்லாம் எடுக்கிறார்கள். பெருசாக பலனில்லை என்றுதான் தோன்றுகிறது.நம் தாத்தாவுக்கு இல்லாத தொப்பை நமக்கு மட்டும் எப்படி வந்து தொலைத்தது? இதனால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன, இந்தகொடுமைக்கு என்னதான் தீர்வு?
ஏன் தொப்பை?
ஒருவருக்குத் தொப்பை ஏற்படுவதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. பொதுவாக, உடலின் தேவைக்கு ஏற்ற உணவு இன்மை, உடல் உழைப்பு இன்மை போன்ற லைஃப் ஸ்டைல் காரணங்களாலும், ஹார்மோன் கோளாறுகள், மரபுரீதியான பாதிப்பு போன்றவற்றாலும் தொப்பை ஏற்படுகிறது.
என்ன தொல்லை?
தொப்பையும் உடல்பருமனும்தான் பல நோய்களுக்கு தலைவாசல் என்பார்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் உட்பட பல பிரச்னைகள் தொப்பையால்தான் ஏற்படுகிறது. எனவே, தொப்பையை எளிதாக எண்ணிவிடாதீர்கள்.

உணவு என்ன செய்கிறது?

மனிதன் இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவில் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துகள், நார்ச்சத்து, நீர்ச் சத்து ஆகியவை உள்ளன. நம் உடல் இவற்றை குளூக்கோஸாக மாற்றி தனக்கான ஆற்றலைப் பெருக்கிக்கொள்கிறது. இப்படி உணவின் மூலம் உடலில் சேகரம் ஆகும் ஆற்றல் நம் உடலின் செயல்பாடுகள் மூலம் எரிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதனுக்கு தினசரி 2,500 கலோரி ஆற்றல் தேவை. நம் உடலின் தேவைக்கு ஏற்ப கலோரியை உடலில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியமாகச் செயல்படுகிறது. கலோரி அளவு குறைந்தால் சோர்வு ஏற்படுகிறது. கலோரி அளவு அதிகமாக இருக்கும்போது நம் உடல் எதிர்காலத்துக்குத் தேவைப்படும் என்று கொழுப்பாக அதை மாற்றிவைத்துக்கொள்கிறது. இப்படி வயிற்றுப்பகுதியில் ஏற்படும் கொழுப்பின் தேக்கத்தைத்தான் நாம் தொப்பை என்கிறோம்.
ஹார்மோன் ஏடாகூடம்
சிலருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். தைராய்டு உடலின் தேவைக்குக் குறைவாகச் சுரந்தால் ஹைப்போதைராய்டு பிரச்னை என்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு தொப்பை உருவாகக்கூடும். பொதுவாக, தைராய்டு சுரப்புக்குத் தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமே உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, போதுமான ஓய்வு போன்ற வாழ்க்கைமுறையும் அவசியம்.
மரபான சொத்து
பொதுவாக, மரபியல்ரீதியாக உடல் பருமன் தொப்பை இருப்பவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றத்தால் தொப்பை, உடல்பருமனை
ஓரளவு கட்டுப்படுத்த முடியும். சிலருக்கு மரபியல்ரீதியாக ஹார்மோன் கோளாறும் இருக்கும். இவர்கள் அதிக உடல்பருமனாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றம் மட்டுமே போதாது. சதைக்குறைப்பு அறுவைசிகிச்சை, கொழுப்பு நீக்க சிகிச்சை போன்றவை தீர்வாக அமையலாம். ஆனால், தொடர்ந்து உடல் எடை அதிகமாகாமல் இருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவை மிகவும் அவசியம்.
உணவில் இருக்கு தீர்வு
ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்தான் முதல் சாய்ஸ். கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து போன்ற அனைத்தும் நிறைந்த சமச்சீர் உணவுகள்தான் உடலுக்கு அவசியம். எனவே, மூன்று வேளை உணவில் இவை அனைத்தும் சமச்சீராக இருக்கிறதாஎன்பதை உறுதி செய்யுங்கள்.
இன்று பெரும்பாலான வீடுகளில் தினசரி மூன்று வேளையும் அரிசி உணவுகளையே உண்கிறார்கள். உடல் உழைப்பு இல்லாமல் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளையே உண்ணும்போது உடலில் தேவையற்ற கொழுப்பு உருவாகி, தொப்பை ஏற்படுகிறது. எனவே தினமும் மூன்றும் வேளையும் அரிசி என்பதை சிறிது மாற்றலாம். வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு கம்பு, தினை, கேழ்வரகு, குதிரைவாலி, பனிவரகு, சோளம் போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்ப்பது நல்லது. சிறுதானியங்களில் புரதங்கள், வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் என்பதால் சமச்சீரான மெனுவை உருவாக்கசிறுதானியங்கள் உதவும்.
50 வயதைக் கடந்தவர்கள் உணவை ஐந்து வேளையாகப் பிரித்து உண்பது செரிமானத்துக்கு எளிது. இதனால் உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகிறது. அடிக்கடி உண்பதால் பசியும் பெரிதாக இருக்காது. இதனால் உணவின் அளவு குறையும். தேவையற்ற கலோரி சேர்வது தடுக்கப்படும்.காய்கறிகள், பழங்களில் வானவில் கூட்டணியை உருவாக்குங்கள். அதாவது, தினசரி ஏதேனும் ஒரு வண்ணத்தில் ஒரு காய், பழம் என மெனுவில் சேர்த்திடுங்கள். காய்கறிகளில் வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழு நாட்களுக்கு ஏழு வண்ணங்கள் என உடலில் சேரும்போது அனைத்துவிதமான சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கின்றன.
ஜங்க் ஃபுட்ஸ், எண்ணெய் பலகாரங்கள், நொறுக்குத் தீனிகள், சாட் ஐட்டங்கள், ஐஸ்கிரீம்கள், சாக்லெட், கோலா போன்ற கார்போனேட்டட் பானங்கள் போன்றவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் அறவே தவிர்த்திடுங்கள். இவைகளில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்பும் நிறைவுற்ற கொழுப்பும் நிறைந்துள்ளன. இவை வயிற்றில் தங்கி தொப்பை, உடல்பருமன் ஏற்படுகிறது. மேலும், இதய ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு அடைப்பதால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட இதய நோய்களுக்கு வாய்ப்பாகிறது.
உணவு இடைவேளையின்போது பஜ்ஜி, போண்டா, பர்கர், பீட்சா போன்ற எண்ணெய் பலகாரங்கள், ஜங்க்ஃபுட்ஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக ஏதேனும் பழத்தையோ, பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ்களையோ, முளைகட்டிய பயிறு, சுண்டல் போன்றவற்றையோ சாப்பிடலாம். இதனால், நல்ல கொழுப்பு உடலில் சேரும். நல்ல கொழுப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை காலி செய்து உடலுக்கு வலுவைத் தருகிறது. இதனால், இதய நோய்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் தவிர்க்கப்படுகின்றன.
செரிமானம்தான் உடல் ஆரோக்கியத்தின் முதல்படி. எனவே உங்கள் உணவில் செரிமானத்தை மேம்படுத்தும் உணவுகள் இருக்கட்டும். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் உடலில் உள்ள தேவையற்ற கழிவை வெளியே கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், நார்ச்சத்து கலோரியே இல்லாதது. சாப்பிட்டால் பசியுணர்வும் நீங்கும். எனவே, இயன்றவரை நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உடலில் சேருங்கள்.தயிர் செரிமானத்தின் நண்பன். தயிரில் புரோபயாட்டிக் எனப்படும் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா நிறைந்துள்ளன. இதனால், செரிமான மண்டலம் மேம்படும். இந்தியா போன்ற மிதவெப்ப மண்டலத்துக்கு தயிர் ஒரு முக்கியமானஉணவுப் பொருள். எனவே, தயிர் தினசரிஉணவில் இருக்கட்டும்.நம் உடல் நீராலானது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது தேவையற்ற கசடுகள் அதிகரிக்கின்றன. நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டியது அவசியம்.
பயிற்சியில் கரைக்கலாம்
உடற்பயிற்சி என்பது தொப்பை குறைப்பில் தவிர்க்க இயலாத அம்சம். தினசரி நம் உடலில் சேரும் தேவை இல்லாத கொழுப்பை கரைத்தால்தான் தொப்பையைத் தவிர்க்க முடியும். இதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்.வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் சிறந்த பலன் அளிப்பவை. தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது முந்தைய தினத்தின் கொழுப்பை எரிக்க உதவும்.
ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில், வெயிட் லிஃப்ட் செய்தால்தான் உடற்பயிற்சி என்றில்லை. தினசரி காலை எழுந்ததும் கை, கால்களை, நீட்டுவது, முறுக்குவது என ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் செய்துவிட்டு ஒரு வாக் போகலாம். தினசரி 10,000 ஸ்டெப்புகள் நடக்க வேண்டியது அவசியம்.உங்கள் நடைப்பயிற்சியை நீங்கள் பணி நிமித்தம் மேற்கொள்ளும் நடையுடன் கணக்கிட்டு நடக்கலாம். தற்போது நிறைய பீடோமீட்டர் ஆப்ஸ்கள் வந்துள்ளன. இவற்றைத் தரவிறக்கி வைத்துக்கொண்டு உங்கள் நடையைக் கண்காணிக்கலாம். அதிகாலையில் நடைப்பயிற்சி செய்வதால் காற்றில் உள்ள ஓசோனால் மூளை செல்கள் புத்துணர்வடைகின்றன. மேலும், சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி தோகுக்குக் கிடைக்கிறது. எனவே, நடப்பதற்கான நேரமாக காலை இருப்பது நல்லது.
அதிக எடை உள்ளவர்கள் ஜிம்முக்குச் சென்று கோச்சின் உதவியுடன் எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கலாம். ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், மாதம் இரண்டு கிலோ எனத் திட்டமிட்டு படிப்படியாக குறைப்பதுதான் சிறந்த வழி.
நடனமும் நீச்சலும் உடல் எடையைக் குறைக்க மிகச்சிறந்த வழிகள். தற்போது ஏரோபிக்ஸ் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் வந்துள்ளன. இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுவது உடல், மனம் இரண்டையுமே ஃபிட்டாக வைத்திருக்க உதவுகிறது. உடலுக்கும் மனதுக்குமான ஒத்திசைவு அதிகரிக்கும்போது இயல்பாக தொப்பை குறைந்து ஃபிட்டாகலாம்.

சிகிச்சைகள் உண்டா?

பொதுவாக, அதிக உடல் பருமன் உள்ளவர் களுக்கு இரைப்பை குறைப்பு அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. இரைப்பை மற்றும் சிறுகுடல் பகுதிகளில் இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பி.எம்.ஐ எனப்படும் பாடி மாஸ் இண்டெக்ஸ் அளவு 37.5க்கு மேல் இருந்தால் அது அதிக உடல் பருமனைக் குறைக்கும். இவர்கள் அவசியப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். அதே போல லைப்போசக்ஷன் எனப்படும் குடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றும் சிகிச்சையும் நடைமுறையில் உள்ளது. மேலும், வளர்சிதைமாற்றங்களைத் தூண்டும் மாத்திரைகளும், பசியைகட்டுப்படுத்தும் மாத்திரைகளும் உள்ளன. ஆனால், இந்த சிகிச்சைகள் அனைவருக்கும் ஏற்றவை அல்ல. உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை மாற்றங்களால் உடல் எடைக்குறைப்பு செய்ய முடியாதவர்கள் மட்டுமே மருத்துவர் ஆலோசனைப்படி இந்த சிகிச்சைகளை
மேற்கொள்ள வேண்டும்.
ரெஸ்டு எடுங்க பாஸ்
உடல் பருமனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உடலின் வளர்சிதை மாற்றங்கள் எனப்படும் மெட்டபாலிசம் இயல்பாக நடைபெற வேண்டியது அவசியம். தினசரி ஆரோக்கியமான உணவுகள், நல்ல ஆரோக்கியமான மனநிலை, உடல்நிலை, போதுமான ஓய்வு, உடற்பயிற்சி, உடல் உழைப்பு போன்றவை வளர்சிதை மாற்றம் இயல்பாகநடைபெற உதவும். தினசரி எட்டு மணி நேர உறக்கம் அவசியம். ஏனெனில், உறக்கத்தில்தான் நம் உடலின் வளர்சிதை மாற்றப்பணிகள் துரிதமாக நடக்கின்றன. அதாவது, நம் மூளை மற்ற வெளி உறுப்புகளின் இயக்கத்தை நிறுத்திவிட்டு உள் உறுப்புகளைசுத்திகரிக்க செயல்படும் நேரம் இரவுதான். உறக்கம் பாதிக்கப்படும்போது வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு தொப்பை, உடல் பருமன்ஏற்படுகிறது.மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தேவையற்ற டென்ஷன், பதற்றம் போன்றவை ஏற்படும்போது அதனால் நம் உடல் ஆரோக்கியமும் கெடுகிறது. எனவே,  நம்மை மேம்படுத்தும், ரிலாக்ஸாக வைத்திருக்கும் சிறப்பான பொழுதுபோக்குகளைப் பழக்கப் படுத்திக்கொள்வது மிகவும் நல்லது. 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: