கருகரு கூந்தலுக்கு… கொட்டைக்கரந்தை!
கரந்தைப்பூ… சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, கருங்கரந்தை, நாறும்கரந்தை, குத்துக்கரந்தை, சிறுகரந்தை, சுனைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுக்கரந்தை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தக் கரந்தைப்பூ மூன்று வகைப்படும். விஷ்ணுகரந்தை நீல நிறத்திலும் சிவகரந்தை வெள்ளை நிறத்திலும் பூக்கும். கொட்டைக்கரந்தை என்பது நெருஞ்சில் காயைப்போன்று கூட்டுக்காயாக இருக்கும். இவற்றில் கொட்டைக்கரந்தையின் மருத்துவக்குணம் அதிசயிக்கத்தக்கது. ஸ்பேரான்தஸ் இண்டிகஸ் (Sphaeranthus indicus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட கொட்டைக்கரந்தை, ஈரமான இடங்களில் நெல் வயல்களில் களைச்செடியாகவும், வரப்புகளின் ஓரங்களிலும் வளரக் கூடியது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா.
தினகரன் – திவாகரன்… திடீர் சந்திப்பு பின்னணி!
‘வெளியில் சண்டையிடுகிறார்கள், உள்ளே கூடிக்கொள்கிறார்கள். மாட்டிக்கொண்டு முழிப்பது என்னவோ ஆதரவாளர்கள்தான்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘யாரைச் சொல்கிறீர்கள்?” என்றோம்.
‘‘சசிகலா குடும்பத்தைத்தான் சொல்கிறேன். மன்னார்குடியில் தினகரனுக்கு ஆதரவாக கடந்த 11-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் திடீரென ரத்தானதும், பேச்சாளர்கள் அவமானத்தோடு திரும்பியதும் தெரிந்த கதைதான். அதன் பின்னணியில் திவாகரன் இருந்தார். திரும்பிப் போகும்போது, கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘மன்னார்குடிக்கு இவர் ராஜான்னா, கர்நாடகாவுக்கு நான் ராஜா. என்னோட பவரை நான் அங்கே காட்டறேன்’ எனத் திவாகரன் பெயரைக் குறிப்பிடாமல் சொல்லிவிட்டுப் போனார். புகழேந்தி மூலம் இந்தப் பிரச்னை சசிகலாவுக்குப் போய்ச் சேர்ந்ததாம். அவர் மிகவும் வருத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சசிகலா கணவர் நடராசன் தலையிட்டுப் பேசினாராம்.’’
‘‘என்ன பேசினாராம்?”
தோல் நோய்களுக்கு அருகம்புல் சிறந்தது
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்று சொல்வார்கள். நோயாளிகளுக்கு புல் மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. புல்லை மட்டும் இரையாக உண்ணும் விலங்குகளுக்கு, குடல்நோய் வருவதில்லை. மாறாக புல்லால் குடல் புண்கள் குணமடைகிறது.
அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய, தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.