Advertisements

கடகம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

கடகம்  – புனர்பூசம்  4-ம் பாதம், பூசம்,  ஆயில்யம்

தையும் திருத்தமாகச் செய்பவர்களே!

ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.

ராகுவின் பலன்கள்: அனுபவபூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால், ராசியிலேயே ராகு அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விமர்சித்தாலும்

பொருட்படுத்தாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தவும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் விரயாதிபதியும் திரிதியாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், உற்சாகம் பிறக்கும். பணப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மகளின் திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். 

   5.4.18 முதல் 10.12.18 வரை உங்கள் சப்தமாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் செல்வதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். அவ்வப்போது சின்னச் சின்னக் கவலைகள் வந்து நீங்கும்.

உங்கள் சஷ்டமாதிபதியும் பாக்கியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பகவான் செல்வதால், நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். புது வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.
வி.ஐ.பி-க்களின் நட்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மாணவ மாணவியர் தங்கள் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆய்வகங்களில் பரிசோதனையில் ஈடுபடும்போது கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். வியாபாரம் ஒரு நேரம்போல் மறு நேரம் இருக்காது. வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். அதனால் வேலைச்சுமை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமான பொருள்களை விற்பதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். அதிகாரிகளுடன் சின்னச்சின்ன மோதல்கள், விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். உரிமைகளுக்காகப் போராட வேண்டியிருக்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வைக்கவும். சிலர் உங்கள் மீது வழக்கு தொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.   

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 7-ல் கேது அமர்வதால், ஏமாற்றம் மற்றும் குழப்பங்களில் இருந்து மீள்வீர்கள். மனதில் தைரியம் பிறக்கும். பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். முடிந்தவரை சகிப்புத் தன்மையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின் தொடர்பைச் சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசாங்க விஷயங்கள் தாமதமாக முடியும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:  27.7.17 முதல் 29.11.17 வரை உங்கள் ஜீவனாதிபதி மற்றும் பூர்வ புண்ணியாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், புதிய திட்டங்கள் நிறை வேறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ராசியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது பகவான் செல்வதால், உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2,3,4-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கம்பீரமாகப் பேசி, காரியம் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் இணக்கமாகப் பழகுவது நல்லது.

இந்த ராகு – கேது பெயர்ச்சி, சிறிது ஆரோக்கியக் குறைவையும், நிம்மதியின்மையையும் தந்தாலும், மற்றவர்களைப் புரிந்துகொள்ள வைத்து முன்னேற்றம் அடையச் செய்யும்.

பரிகாரம்: நாகப்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது கீழையூர். திருவோண நட்சத்திர நாளில் இவ்வூருக்குச் சென்று, சேஷசயனப் பெருமாளை வழிபடுங்கள்; வாழ்க்கைச் சிறக்கும்.

Advertisements
%d bloggers like this: