ராங் கால் – நக்கீரன் 22.06.2017
ராங் கால் – நக்கீரன் 22.06.2017
இது எனது அரசு -நக்கீரன் 22.06.2017
இது எனது அரசு -நக்கீரன் 22.06.2017
உங்கள் சமூகவலைத்தள கணக்குகளை சீர்செய்ய உதவும் 5 செயலிகள்
இன்றைய டெக்னாலஜி உலகில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு சமூக வலைத்தளத்தின் புரஃபொலையும் மேனேஜ் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
மெத்தென்ற பாதம் கிடைக்க யாருக்குதான் ஆசை இருக்காது? அது நீங்க செய்ய வேண்டிய ட்ரிக்ஸ் இதோ!!
பாதங்கள் தான் நம்மை தாங்கி நிற்கும் உறுப்பாகும். இவற்றால் தான் நம்மால் நடக்க முடிகிறது. ஆனால் அப்படிப்பட்ட பாதங்களை நாம் கவனிப்பதே இல்லை. நீங்களே சொல்லுங்கள் தினமும் படுப்பதற்கு முன் உங்கள் கைகளுக்கு க்ரீம் மற்றும் முகத்திற்கு மாஸ்க் போட்டு பராமரிப்போம்.
ஆனால் நம் பாதங்களை பற்றி நாம் அக்கறை எடுத்துக் கொள்ளவதில்லை. ஒவ்வொரு நாள் இரவும் வெளியில் போய் விட்டு வந்து பாதங்களை கழுவ கூட நேரம் இல்லாமல் தூங்கி விடுகிறோம். இதனால் நம் பாதங்கள் பாதிப்பிற்கு உள்ளாகும். பாதங்களில் வலி, ஆணிகள், தோல் தடிப்பு போன்றவை ஏற்படும் போது தான் கவலை படுகிறோம்.
மீனம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
மீனம்-பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
மற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதில் வல்லவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்களுக்கு ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் இருந்த சச்சரவு ஓரளவு குறையும். தம்பதிக்கு இடையே மோதல்கள் விலகும். எனினும் சில தருணங்களில் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சிலர் கல்வி
கும்பம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
கும்பம்-அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்
எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 6-ல் அமரும் ராகுவால், ராஜதந்திரமாக முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் பாசத்துடன் நடந்துகொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பாதியில் நிற்கும் வீடு கட்டும் பணியைத் தொடங்க, வங்கிக் கடனுதவி கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட நிபுணர்களை அணுகித் தெளிவு பெறவும்.
மகரம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
மகரம்-உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்
அதர்மங்களை எதிர்த்து நிற்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை, ராகு ஏழிலும் கேது ராசியிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில்வந்து அமர்வதால், உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உற்சாகம் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பி-க்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். எனினும், களஸ்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் ராகு அமர்வதால் கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். மனைவியின் உடல்நலனில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துகளைப் பராமரிப்பீர்கள். வயதில்
தனுசு – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
தனுசு –மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்
உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் கேதுவும் 8-ல் ராகுவும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு 8-ல் மறைவதால், மன அமைதி உண்டாகும். இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிதுர்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் விலகும். ஆனால், ராகு 8-ல் இருப்பதால், எதையும் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
விருச்சிகம் –விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை
பெருந்தன்மையான குணமுள்ளவர்களே! உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் ராகுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை சஞ்சரிக்க உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் அமரும் ராகு, எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையைத் தருவார். செயற்கரிய காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வருமானத்தை உயர்த்த திட்டமிடுவீர்கள். வீடு கட்ட, வாங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். ஆனால், 9-ல் இருக்கும் ராகுவால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக் கூடும். அவருடன் கருத்து வேறுபாடு வரக்கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னைகள் தோன்றக்கூடும்.
துலாம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
துலாம்-சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்
அன்பின் அடையாளமாக இருப்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரையில் ராகு 10-லும், கேது 4-லும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு 10-ல் வந்தமர்வதால், இதுவரையிலும் உழைத்ததற்கான பலன்களை அறுவடை செய்வீர்கள். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை உண்டாகும். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். எனினும், உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும்.