இன்றைய டெக்னாலஜி உலகில் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை என்று கூறலாம். அதுமட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு சமூக வலைத்தளத்தின் புரஃபொலையும் மேனேஜ் செய்வது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
இந்த உலகில் கஷ்டமான பல விஷயங்களை டெக்னாலஜி நமக்கு எளிமைப்படுத்தி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு சமூக வலைத்தளங்களையும் ஒரே இடத்தில் நமக்கு ஒன்றிணைத்து கொடுக்க என்றே சில செயலிகள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து செயலிகளை தற்போது பார்ப்போம்
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹூட் ஷூட் (Hoot Suite)
சமூக வலைத்தள பயனாளிகள் இடையே பேரும் வரவேற்பை பெற்ற இந்த செயலியை சமூக வலைத்தள மேனேஜர் என்றே கூறலாம். உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் இந்த செயலி ஒன்றிணைத்து நமக்கு அளிக்கின்றது. மேலும் இந்த செயலி அனாலிட்டிக் ஆப்சன்களை கொடுப்பது மட்டுமின்றி SEO மற்றும் கீவேர்டுகளை தேடுவதற்கும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோசியல் ஓம்ப் (Social Oomph)
இந்த செயலி உங்களுடைய டுவிட்டர் கணக்குடன் பிண்ட்ரெஸ்ட், லிங்க்ட் இன் மற்றும் இன்னும் ஒருசில சமூக வலைத்தளங்களை இணைக்க உதவுகிறது. மேலும் இந்த செயலி டுவீட்டுக்களை ஷெட்யூல் செய்து பதிவு செய்வதற்கும், உங்கள் புரபொலை தேடுவதற்கு உரிய கீவேர்ட்களை அளித்தும் உதவும். மேலும் இந்த செயலியின் பிரிமியம் வெர்ஷனை வாங்கினால் மேலும் சில வசதிகளை பெறலாம்
ஸ்பிரெட் ஃபாஸ்ட் (Spreadfast )
நீங்கள் பகுப்பாய்வு செய்து சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர் என்றால் இந்த செயலி உங்களுக்கு நண்பனை போன்றது. சமூக வலைத்தளங்களில் உங்களுக்கு தேவையான டேட்டாக்களை இந்த செயலி உங்களுக்கு தொகுத்து கொடுக்கும். மேலும் உங்களுடைய பதிவுகள் எத்தனை பேரை சென்றடைந்துள்ளது என்பதை கண்டறியவும் இந்த செயலி உதவுகிறது. இதனால் உங்களுடைய மார்க்கெட்டிங் தரம் உயரவும் வாய்ப்பு உள்ளது
டெயில்விண்ட் (Tailwind)
சமூக வலைத்தளங்களில் உள்ள உங்களது பதிவுகளை வகைவகையாக பிரித்து தொகுக்க வேண்டும் என்றால் குறிப்பாக இன்ஸ்டாகிராம், பிண்ட்ரெஸ்ட் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த செயலி உங்களுக்கு உதவி செய்யும். உங்களுக்காகவே அர்ப்பணிப்பு உணர்வுடன் உதவும் இந்த செயலி மூலம் பதிவுகளை ஷெட்யூல் செய்வது, டிரெண்டிங் பதிவுகளை காண்பது ஆகியவை மிக எளிதாக இருக்கும்
பேஜ்மோடோ (PageModo)
சமூக வலைத்தளங்களை வர்த்தக நோக்கத்துடன் அணுகுபவர்களுக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது. உங்களுக்கு தேவையான மார்க்கெட்டிங் நபர்கள், மேனேஜர்களை மற்றும் அவர்களது பதிவுகளை பெறுவதற்கு இந்த செயலி மிகவும் உபயோகமாக இருக்கும்,