துலாம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

துலாம்-சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

ன்பின் அடையாளமாக இருப்பவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரையில் ராகு 10-லும், கேது 4-லும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.

ராகுவின் பலன்கள்: ராகு 10-ல் வந்தமர்வதால், இதுவரையிலும் உழைத்ததற்கான பலன்களை அறுவடை செய்வீர்கள்.  நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணவரவு உண்டு. சுயதொழில் செய்யும் வல்லமை உண்டாகும். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். எனினும், உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும்.

 
   
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பாக்கிய ஸ்தானாதிபதியும் விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால் இந்தக் காலகட்டத்தில், தடைப்பட்ட காரியங்கள் நல்லவிதமாக நிறைவடையும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். அலர்ஜி, சிறுநீரகத் தொற்று, தூக்கமின்மை வரக்கூடும்.

5.4.18 முதல் 10.12.18 வரை ராகு உங்களின் சுக பூர்வ புண்ணியாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வீடு, மனை, வாகனம் புதிதாக வாங்குவீர்கள். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் சஷ்டம திரிதியாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 வரை ராகு பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். தலைக்கவசம் அணிந்துசெல்வது நல்லது. பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்க வேண்டாம்.  மாணவர்களே! எதிர்பார்க்கும் கல்விப் பிரிவைப் பெறுவதற்கு அதிகம் போராட நேரிடும். பெண்களுக்குக் கல்யாணப் பேச்சுவார்த்தை தாமதமாக முடியும்.  அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகள் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில், பற்று வரவு கணிசமாக உயரும்.  ராகு 10-ம் வீடான உத்தியோகஸ்தானத்தில் அமர்வதால், பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். எதிர்பார்த்த சம்பள உயர்வும் தாமதமாகும். ஒருவித அச்சம் இருந்துகொண்டே இருக்கும். எனினும், அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கேதுவின் பலன்கள்: கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்தௌ அமர்வதால், குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்குத் திருமணம் முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. அரசாங்க வரிகள் செலுத்துவதில் தாமதம் வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பசியின்மை, ரத்த அழுத்தம், வயிற்றுப் புண் வரக்கூடும்.   

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் தன சப்தமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம், 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால்,  இந்தக் காலகட்டத்தில் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வர். சகோதரர்களுடன் வீண் விவாதங்கள் எழும்.

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில், 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால் சவாலான காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். ஷேர் லாபம் தரும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் லாபாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். மூத்த சகோதரர்களால் பலனடைவீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகி முடியும்.  வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற அங்கீகாரம் இல்லையே எனப் புலம்புவீர்கள். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, சகிப்புத் தன்மையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவோண நட்சத்திர நாளில், சிங்கப்பெருமாள்கோவில் அருகிலுள்ள திருக்கச்சூர், கச்சபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்; மனம் மகிழ வரம் கிடைக்கும்.

<span>%d</span> bloggers like this: