மீனம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

மீனம்-பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

ற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதில் வல்லவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்களுக்கு ராகு 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப்போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்கு  5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குடும்பத்தில் இருந்த சச்சரவு ஓரளவு குறையும். தம்பதிக்கு இடையே மோதல்கள் விலகும். எனினும் சில தருணங்களில் தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சிலர் கல்வி

அல்லது பணியின்பொருட்டு, குடும்பத்தைப் பிரிய நேரிடும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையைச் சுமுகமாக தீர்க்கப் பாருங்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். மகனின் நட்புவட்டாரம் குறித்து  கவனம் தேவை. வழக்கில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தை இயக்கும்போதும் அலட்சியம் கூடாது. யோசித்து செயல்படுங்கள். தாய், தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுக, சப்தமாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு பகவான் செல்வதால், இக்காலக்கட்டங்களில் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். 5.4.18 முதல் 10.12.18 வரை ராகு உங்களின் விரய லாபாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. உங்களின் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பகவான் பயணிப்பதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. மாணவர்கள் விளையாட்டு, இசைப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள். சிலர், உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். கன்னிப்பெண்களே! உங்களின் நீண்டகால கனவுகளில் ஒன்று நிறைவேறும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.  கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில், மற்றவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம். சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்துக் கொடுக்க வேண்டி வரும்.  வேலைச்சுமை இருந்தாலும், பாராட்டால் உற்சாகம் அடைவீர்கள்.
கேதுவின் பலன்கள்:  கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்து அமர்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட சுப காரியங்கள் ஏற்பாடாகும். உங்களில் சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக்கூடும். புது பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை புரிந்துகொள்வீர்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் திடீர் யோகங்கள் உண்டாகும். பண வரவு உண்டு. சிலர், வீடு மாறுவீர்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும்.  உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வேலை கிடைக்கும். 7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், வழக்கில் வெற்றி கிடைக்கும். லாபம் இரட்டிப்பாகும். சிலர், சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். விரும்பிய இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும்.  
மொத்தத்தில் இந்தப் பெயர்ச்சியில் ராகுவின் நிலையால் மனச்சலனம் ஏற்பட்டாலும், கேதுவின் அருளால் நினைத்ததை முடிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருவாடானையில் அருளும் ஆதிரத்னநாயகேஸ்வரரை, சதுர்த்தசி திதி நாளில் சென்று வணங்கி வாருங்கள்; நல்லதே நடக்கும். 

<span>%d</span> bloggers like this: