Advertisements

ரிஷபம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )

ரிஷபம் – கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

நினைத்ததை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை  4-ல் இருந்த ராகு தைரிய ஸ்தானத்தில் அமர்வதால், தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள். முடியாமல் தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். எதிலும் வெற்றி உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தன – பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.17 முதல் 4.4.18 வரை ராகு செல்வதால், புதிய சிந்தனைகள் உதயமாகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை விரிவுபடுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

5.4.18 முதல் 10.12.18 வரை ராகு பகவான் உங்களின் யோகாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். புதிய பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு முயல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் அஷ்டம – லாபாதிபதியான குரு பகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.18 முதல் 13.2.19 முடிய ராகு பகவான் பயணிப்பதால், வீண் அலைச்சல், பணப்பற்றாக்குறை வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி, நெஞ்சு எரிச்சல் போன்ற ஆரோக்கியக் குறை பாடுகள் உண்டாகும். மாணவ மாணவியருக்கு, விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கு இடம் கிடைக்கும்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்து, லாபத்தைப் பெருக்குவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்வீர்கள். அரசாங்க வகையில் நெருக்கடிகள் நீங்கும். சிலர் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கட்டட உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, ஸ்பெஷாக்குலேஷன், துரித உணவகம் போன்ற வகைகளில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத் தில் அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப உங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக்கிடக்கும் வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். சிலருக்கு வெளிநாடு அல்லது வெளிமாநிலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். கலைத் துறையினரே! வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

கேதுவின் பலன்கள்: உங்கள் ராசிக்கு 9-ல் அமரும் கேது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வார். வேலைச்சுமை குறையும். தோல்வி மனப்பான்மை விலகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர்த் திருப்பங்கள் உண்டாகும். பூர்வீகச் சொத்து வகையில் பிரச்னைகள் தலைதூக்கும். புதிதாக அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம்  உண்டாகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 27.7.17 முதல் 29.11.17 வரை உங்களின் சப்தம – விரயாதி பதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேது பகவான் செல்வதால், எதிர்பாராத திடீர் முன்னேற்றம் உண்டா கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துகள் சேரும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். உங்களின் திரிதியாதி பதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.17 முதல் 6.8.18 வரை கேது செல்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சில நேரங்களில் சளித் தொந்தரவு, கழுத்துவலி வந்து நீங்கும்.   7.8.18 முதல் 13.2.19 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால், பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியத்துவம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீங்கும்.  கேதுவால் அவ்வப்போது சவால்களை எதிர் கொண்டாலும், ராகுவின் அனுக்கிரகத்தால் வெற்றிக் கனியைப் பறிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது பெயர்ச்சி, உங் களது திறமையை வெளிப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: பூச நட்சத்திரத் திருநாளில், திருவாரூர் புற்றிடங்கொண்ட ஈஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்.

Advertisements
%d bloggers like this: