கன்னி – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
கன்னி –உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்
சமயோசித புத்தியுடன் செயலாற்றுபவர்களே! உங்களுக்கு 27.7.17 முதல் 13.2.19 வரை ராகு லாப வீட்டிலும், கேது 5-ம் வீட்டிலும் அமர்ந்து பலன் தரப் போகிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டுக்கு வருவதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் தம்பதிக்கிடையே சந்தோஷம் குடிக்கொள்ளும். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வியில் பிள்ளைகளின் நிலை உங்களைத் தலைநிமிரச் செய்யும். உங்களில் சிலருக்குப் புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலமாகப் பணம் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
சிம்மம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
சிம்மம்-மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்
எதிலும் முதலிடத்தை விரும்புபவர்களே!
27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 12-ல் ராகுவும் 6-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.
ராகுவின் பலன்கள்: ராகு பகவான் 12-ல் செல்வதால், சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்றுசேருவர். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். ஆனால், ராகு விரயத்தில் இருப்பதால், எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். செலவுகள் எதிர்பார்த்ததை விடவும் அதிகரிக்கும். அடிக்கடி கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.
கடகம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
கடகம் –புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்
எதையும் திருத்தமாகச் செய்பவர்களே!
ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் 27.7.17 முதல் 13.2.19 வரை அமர்ந்து பலன் தர இருக்கிறார்கள்.
ராகுவின் பலன்கள்: அனுபவபூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம்பிடிப்பீர்கள். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகைக் கைக்கு வரும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால், ராசியிலேயே ராகு அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் விமர்சித்தாலும் பொருட்படுத்தாமல் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்தவும்.
மிதுனம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
மிதுனம்-மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்
அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களே!
27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அமர்ந்து தரக்கூடிய பலன்களைப் பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்: வாக்குஸ்தானத்தில் ராகு அமர்வதால், முன்யோசனையுடன் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. பணம்வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கண் பார்வையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினரிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொள்வது நல்லது. திடீர் செலவுகள் அதிகரிக்கும். ஒரு சிலருக்குக் காலில் அடிபட வாய்ப்பு இருக்கிறது.
ரிஷபம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
ரிஷபம் – கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்
நினைத்ததை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் கேதுவும் அமர்ந்து பலன் தர உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: இதுவரை 4-ல் இருந்த ராகு தைரிய ஸ்தானத்தில் அமர்வதால், தடைகளைத் தகர்த்து முன்னேறுவீர்கள். முடியாமல் தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். எதிலும் வெற்றி உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
மேஷம் – ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் ( 27.7.2017 முதல் 13.02.2019 வரை )
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்
அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்
எண்ணியதை முடிப்பவர்களே! 27.7.17 முதல் 13.2.19 வரை உங்கள் ராசிக்கு 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் சஞ்சரிக்க உள்ளார்கள்.
ராகுவின் பலன்கள்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் உத்தியோகம், உயர் கல்வி தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். எந்த ஒரு காரியத்திலும், பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது.