சருமத்தை மிருதுவாக்கும் பாதாம் எண்ணெய்

ரத்தத்தில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகரிக்கவும், கேடு செய்யும் கொழுப்பு குறையவும் தினமும் பாதாம்பருப்பு சாப்பிடுவது நல்லது. கடுமையாக உழைக்க கூடியவர்களுக்கு நல்ல கொழுப்பு தேவை. வேலையும், கவலையும் அதிகம் என்றால் பாதாம் பருப்புகளையே தொடர்ந்து சாப்பிடலாம்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு உள்ளது. குளுட்டாமிக் அமிலமும் அதில் உள்ளது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.
பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமானத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹார்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரம் தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.
பாதாம் மட்டுமல்லாது இதர கொட்டை பருப்புகளும்கூட “டைப் 2′ நீரிழிவு நோயை குணப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பவர்களுக்கு இருதய நோய் ஏற்படுவதற்கு காரணமான மூல காரணிகளையும் அது தடுக்கிறது. பாதாம் பருப்பை பக்கத்தில் வைத்துக்கொண்டால் நீரிழிவு, இருதய நோய்கள் அருகில் அண்டாது என்பதே, மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் தரக்கூடியதும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதும், குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய கஞ்சி வகைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
ஒவ்வொரு மணத்துக்கும், ஒவ்வொரு சுவைக்கும் நோய்களை தீர்க்கும் தன்மை உண்டு. பல சுவைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் நம்மை தாக்காது. இளம்வயதில் சத்தூட்டாமான உணவு சாப்பிட்டு வந்தால், எதிர்காலத்தில் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம். பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய் உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகிறது.

<span>%d</span> bloggers like this: