தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

முதல்வர் பழனிசாமி அணியினர், தினகரன் தரப்பினரை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக முடிவுகளை அறிவிப்பது, தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., – சசிகலா அணியில், தற்போது முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் ஆதரவு அணி என, பிளவு ஏற்பட்டுள்ளது. ‘சிறையில் இருந்து, ஜாமினில் வெளிவந்த தினகரனை, யாரும் சந்திக்க மாட்டார்கள். அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்த, எங்களுடைய நிலை பாட்டில் மாற்றமில்லை’ என, அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார்.

நோன்பு திறப்பு

ஆனால், 34 எம்.எல்.ஏ.,க் கள், தினகரனை சந் தித்து, ஆதரவு தெரிவித்தனர். அதன்பின், அந்த எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பழனி சாமியை சந் தித்து பேசினர்.அப்போது, ‘கட்சியில் தினகர னுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை, அவரது தலைமையில் நடத்த வேண்டும். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை,அவரது தலைமையில் நடத்த வேண்டும். அவர் கட்சியை வழிநடத் தட்டும்; நீங்கள் ஆட்சியை வழிநடத்துங்கள்’ என, வலியுறுத்தினர்.
அதை, முதல்வர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, முதல்வர் தலைமையில் நடந்தது; தினக ரன் பங்கேற்கவில்லை. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு துவக்க விழா, முதல்வர் தலைமையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன், தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். வெளியில் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ‘ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பதை, பொதுச் செயலர் முடிவு செய்வார்’ என, தெரிவித்தார். அதேநாளில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும், சசிகலாவை சந்தித்து பேசினார்.

ஆலோசனை கூட்டம்

பின், கட்சி அலுவலகத்தில், முதல்வர் தலைமை யில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில்,பா.ஜ., வேட்பாளரை ஆதரிப்பதாக, முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு, சசிகலா சம்மதம் பெறப்பட்டதா என்ற விபரம் வெளியிடப்படவில்லை. முதல்வர் பழனிசாமி தன்னிச்சையாக, பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்தது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, மறுநாள் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், அவரது வீட்டில் கூடி ஆலோ சனை நடத்தினர்.
கூட்டத்தில், ‘காங்., உட்பட எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ள வேட் பாளரை, தி.மு.க., ஆதரிக்க உள்ளது. பா.ஜ., வேட்பா ளரை ஆதரிப்பதாக, முதல்வரும், பன்னீரும் அறிவித்து விட்டனர். இதற்கு மாறான முடிவு எடுத்தால், எந்த பலனும் ஏற்படாது. எனவே, பா.ஜ., வேட்பாள ரையே ஆதரிப்போம்’ என, முடிவு செய்தனர்.
அந்த முடிவை, தினகரன் அறிவித்தார். தாங்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும், முதல்வர் பழனிசாமி அணியினர் புறந்தள்ளி விட்டு, மத்திய அரசு ஆதரவுடன், தன்னிச்சை யாகச் செயல்படுவது, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

<span>%d</span> bloggers like this: