தைராய்டு பிரச்னை தப்புவது எப்படி?

மக்கள் பலரும் தற்போது தைராய்டு பாதிப்பால், அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம், இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது.

இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. இது நோய் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்குக் காரணம். இதில், ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் என இரு பாதிப்புகள் ஏற்படுகிறது. தைராய்டு ஹார்மோனானது, குறைவான அளவில் சுரப்பதால் ஏற்படுவது ஹைப்போ தைராய்டிசம் ஆகும். அளவுக்கு அதிகமாக சுரப்பது, ஹைப்பர் தைராய்டிசம். ஆரம்பத்தில் சரி செய்யாவிட்டால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.
ஹைப்பர் தைராய்டிசம் முற்றிய நிலையில் இருந்தால், உடல் எடை அளவுக்கு அதிகமாக திடீரென்று அதிகரிக்கும். உடல் மிகவும் சோர்வுடன் இருக்கும். பெண்களுக்கு தைராய்டு அதிகமாக இருந்தால், அது தைராக்ஸின் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கை உண்டாக்கும். குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படும்.
வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுவதில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழுவது மாதிரி தோன்றும். தைராய்டு குறைபாடு காரணத்தால், பெண்கள் பருவமடையும் வயது, தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வரலாம்.
தைராய்டு சுரப்பி செயல்பாடு முறையாக இல்லாத போது, கழுத்துப் பகுதி வீக்கமடையும். சில சமயங்களில் கழுத்து வீக்கம், அயோடின் குறைபாட்டினாலும் ஏற்படும். இதில் கவனமாக இருக்க வேண்டும். ஹைப்பர் தைராய்டு இருந்தால், மன அழுத்தம் ஏற்படும். எந்நேரமும் ஒருவித மன கஷ்டத்துடன், எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்.
தைராய்டு அதிகமாக இருந்தால், கொலஸ்ட்ராலின் அளவும் அதிகமாக இருக்கும். இதற்கான டயட் மற்றும் மருந்துகள் மேற்கொண்டாலும், குறையாமல் இருந்தால், அது ஹைப்பர் தைராய்டிசத்திற்கு அறிகுறியாகும். ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால், குடலியக்கம் சீராக செயல்படாமல், மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும். மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவையும், தைராய்டு என்பதற்கான அறிகுறிகள். எந்த ஒரு செயலை செய்தாலும், அதைச் செய்வது மெதுவாகவும், மந்தமாகவும் இருக்கும். இந்த நோய், எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது.
ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது. உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போதல், மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாகக் காணப்படுதல் ஆகியவை ஹைப்போ தைராய்டு அறிகுறியாகும்.
அளவுக்கு அதிகமான கூந்தல் உதிர்ந்தால், தைராய்டு முற்றியுள்ளதற்கு அறிகுறி. சில சமயங்களில் அவை வழுக்கையையும் உண்டாக்கும். தைராய்டு ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், தசை பிடிப்புக்கள் ஏற்படுவதோடு, ஆங்காங்கு வலிகளையும் உண்டாக்கும். இத்தகைய வலிகள் கடுமையாக இருக்கும். அடிக்கடி தூக்கம் வருதல், மறந்துவிட்டு முழித்தல், உடல் எடை அதிகரிப்பது, சோர்வு அதிகரிப்பு, சிறு விஷயத்திற்கும் டென்ஷன் , எரிச்சல், படபடப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால், தைராய்டு டெஸ்ட் எடுத்துக்கொள்வது அவசியம்.

%d bloggers like this: