நீங்கள் இளமையாக தெரியனுமா? இந்தாங்க சூப்பர் பேஸ் மாஸ்க்கள்

நமது சருமம் தான் உடலிலே பெரிய உறுப்பாகும். இது நாள் முழுவதும் வேலை செய்வதோடு இரவு நேரத்தில் கூட தனது வேலைகளை தொடர்கிறது. நீங்கள் மாசுக்கள் மற்றும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட நமது சருமம் அதை வெளிக்காட்டி விடும்.

நமது முகச் சருமம் எல்லாரும் பார்க்கும் விதத்தில் இருப்பதால் உங்கள் மனதில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் நீங்கள் வயதாவது எல்லாவற்றையும் முதலில் அடையாளம் காட்டு விடும். அதான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

 

நீங்கள் வயதாவதன் முதல் அறிகுறியே முகச் சுருக்கம் மற்றும் சரும கோடுகள் ஆகும். மேலும் சருமத்தின் மீட்சித் தன்மையும் குறையும். சருமத்தில் உள்ள கொலாஜன் குறைவதால் உங்கள் சருமம் மிருதுவான தன்மையை இழக்க நேரிடும். உடலிலும் இந்த கொலாஜன் அளவு குறைவது தீவிர சரும பிரச்சினைகளை உருவாக்கி விடும்.

இதனால் தான் ஆன்டி – ஏஜிங் பொருட்கள் கொலாஜனை கொண்டு தயாரிக்கின்றனர். இந்த பிரச்சினைகளை தடுப்பதற்கு நிறைய முறைகள் இருப்பினும் எல்லாம் விலை அதிகம். பாதுகாப்பு அற்றது.

எனவே தான் சருமம் வயதாவதை தடுக்க இயற்கை வழிமுறைகள் நல்லது. இவைகள் உங்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.

இந்த கட்டுரையில் சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்றவற்றை இயற்கையான முறையை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்பதை பற்றி பார்க்க போறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1.வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் மாஸ்க்

வாழைப்பழம் சாப்பிடுவதற்கு மட்டுமில்லாமல் சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை தருகிறது. ஆரஞ்சு ஜூஸில் உள்ள விட்டமின் ஈ சரும பாதிப்பின் தீவிரத்தை குறைக்கிறது.

தேவையான பொருட்கள்

1 வாழைப்பழம்
1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ்
1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

செய்முறை

1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.
2. அதனுடன் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் யோகார்ட் போன்றவற்றை கலக்க வேண்டும்.
3. இந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்.

2.வெள்ளரிக்காய் மற்றும் யோகார்ட் மாஸ்க்

வெள்ளரிக்காயில் பி1, பி2, பி3, பி5, பி6, பொட்டாசியம், போலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச் சத்து கால்சியம், விட்டமின் சி, பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் உள்ளது. எனவே இது உங்கள் சருமத்தை பொலிவாக ஈரப்பதமுள்ளதாக மாற்றுகிறது. மேலும் சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரி செய்கிறது.

தேவையான பொருட்கள்

1/2 வெள்ளரிக்காய்
1/2 கப் கிரீக் யோகார்ட்
1 கைப்பிடியளவு புதினா இலைகள்

செய்முறை

1. வெள்ளரிக்காய் மற்றும் புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. இதனுடன் கிரீக் யோகார்ட் கலந்து அதை பிரிட்ஜில் 15-20 நிமிடங்கள் வைக்க வேண்டும்
3. பிறகு இந்த குளிர்ந்த கலவையை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

 

3. முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க்

முட்டையின் வெள்ளைக் கரு உங்கள் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். எனவே இது சரும கோடுகளை காணாமல் செய்து விடும். தேனில் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் இருக்கின்றன. இதுவும் சருமத்திற்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

1வெள்ளைக் கரு
1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ்
1/2 டேபிள் ஸ்பூன் தேன்

1. செய்முறை

2. மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக ஒரு பெளலில் கலந்து கொள்ள வேண்டும்.
3. இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.
4. பிறகு நீரில் கழுவினால் இளமையான அழகான சருமம் உடனே கிடைக்கும்.

 

4.ஓட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்

இந்த ஆன்டி ஏஜிங் மாஸ்க் சுருக்கங்களை குறைத்து சருமத்தை இறுக்கடையச் செய்கிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ்
1/2 கப் பட்டர் மில்க்
1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்

செய்முறை

1. ஓட்ஸ் மற்றும் பட்டர் மில்க்கை கலந்து மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து சூடுபடுத்த வேண்டும். ஓட்ஸ் மென்மையாக ஆகும் வரை இதை பண்ணவும்.
2. பிறகு ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய்களை கலந்து அதை 5-10 நிமிடங்கள் குளிர் படுத்த வேண்டும்.
3. பிறகு முகத்தை மைல்டு க்ளீனர்ஸ் பயன்படுத்தி கழுவி விட்டு இந்த மாஸ்க்கை முகத்தில் தடவ வேண்டும்.
4. 15-20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும்.
5. பிறகு குளிர்ந்த நீரில் கழுவி காய வைத்தால் போதும் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

 

5.உருளைக்கிழங்கு மற்றும் ஆப்பிள் மாஸ்க்

இந்த மாஸ்க் உங்கள் சரும அமைப்பை மேம்படுத்துகிறது. பொலிவான கோடுகள் இல்லாத இறுக்கமான சருமத்தை தருகிறது . சூரியனால் ஏற்பட்ட சரும பாதிப்பை சரி செய்கிறது.

தேவையான பொருட்கள்

2 உருளைக்கிழங்கு
2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் துண்டுகள்

செய்முறை

1. உருளைக்கிழங்கை வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
2. இதனுடன் ஆப்பிள் துண்டுகளையும் போட்டு வழுவழுவென அரைக்கவும்
3. இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் இருக்க வேண்டும்
4. பிறகு கழுவி விட்டு ஜஸ் கட்டிகளை முகத்தில் தேய்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளுடன் சில வேறு டிப்ஸ்களையும் பயன்படுத்தினால் சருமம் வயதாவதை சீக்கிரம் தடுத்து விடலாம். சாடின் தலையணை உறை கொண்ட தலையணையில் இரவு நேரத்தில் படுத்தால் வயதாவது குறையும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை மேற்கொண்டால் நீங்கள் எப்பொழுதும் இளமையாக ஜொலிப்பீர்கள்.

%d bloggers like this: