வாகன உடல்வாகுக்கு வஜ்ரவல்லி!

நவநாகரிக உலகில், மனிதர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக பராமரிப்பது சவால் நிறைந்தது. வேலை முறைகளின் எளிதாக்கம், உடல் உழைப்பினை சுருக்கி விட்டது. எனவே, கட்டுறுதியான உடல் அமைப்பை பெற, உடற்பயிற்சி, ஓட்டம், “ஜிம்’ யோகா, என்று விதவிதமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பயிற்சிகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் உடலை உறுதி செய்வதில்,

உணவு முறைகளுக்கும் உண்டு.
மனித உடலமைப்பில் சதைப்பகுதிகளை உறுதியாக பராமரிப்பதோடு, உள் நரம்புகள், எலும்புகளையும் உறுதியாக வைத்திருக்கும் அவசியம் உள்ளது. உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு சத்துக்களுக்கு சரிவிகித உணவுகளை பலரும் சிபாரிசு செய்வதை பார்க்கலாம்.
இவை தவிர, நமது பழங்கால உணவு முறைகளிலும், சில வகையான காய்கள், கனிகள், இலை தழைகளும் கூட உடலை உறுதி செய்வதில் பெரும் பங்கு
வகித்தன. அப்படியான ஒன்றுதான் பிரண்டை.
பிரண்டையின் வகைகள்: பிரண்டையில் பல வகை உண்டு. புளிப்பிரண்டையை அரைத்து, காரத்துவையல் செய்து சாப்பிட்ட மரபெல்லாம் கூட தமிழ் மூதாதையரிடம் இருந்துள்ளது. இதேபோல, மணிப்பிரண்டை, பழப்பிரண்டை என்று இன்னும் அறியப்படாத பல வகைகளும் பிரண்டையில் இருந்திருக்கின்றன.
பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து, எலும்பு மஜ்ஜையில் திரவம் அதிகமாக சுரந்திடச் செய்கிறது. மனித உடலில் வாய் தொடங்கி, ஆசனவாய் வரையிலும் உருவாக வாய்ப்புள்ள, 300 நோய்களுக்கு இந்தப்பிரண்டை, அருமருந்தாக உள்ளது. குறிப்பாக, பிரண்டை, மனிதனின் சிறுகுடலில்
ஏற்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்கிறது.
செய்முறை: பிரண்டையுடன், உப்பு கலந்து, 300 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும். உடல் எடையும் எளிதில் குறையும். சிறுகுடல் மற்றும் வயிற்றில் தங்கியுள்ள வாயு முழுவதும்
வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.
இது தவிர பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும், இடுப்பு வலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல், அல்லது பிரண்டையை உப்பு சேர்த்து பயன்படுத்தினால் நல்லது. பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கும் இந்தப் பிரண்டை அருமருந்தாகும். பிரண்டையை தொடர்ந்து உட்கொண்டால், கால்சியம் குறைபாடுகளுக்காக கால்சியம் மாத்திரை பயன்படுத்த வேண்டியதில்லை. இதனால், நமது சிறுநீரகமும் காக்கப்படுகிறது.
இதனால் தான், “வைரம் கூட பிரண்டை சாற்றில் பொடியாகும்’ என்று ஏழாயிரத்தில் சித்தர் போகர் குறிப்பு கூறுகிறது. வைரத்தில் உள்ள கடினமான
கார்பன் பிணைப்பையே பிரண்டை உடைக்கும் என்றால், நமது தேகத்தை வஜ்ரம் போல வலிமையாக உண்டாக்கும் திறன் பிரண்டைக்கு உண்டென அறியலாம். இதனால் தான், பிரண்டைக்கு “வஜ்ரவல்லி’ என்று செல்லமாய் பெயரிட்டுள்ளனர்.

%d bloggers like this: