கண் அழற்சியை போக்க சில வழிமுறைகள்!

கண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவந்து, அதில் வீக்கம் ஏற்பட்டால் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இதுதானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில நேரங்களில் தேவைப்படும். பொதுவாக, 2 கண்களும் பாதிக்கப்படும்,
ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.

கண்ணின் வெண்மை பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும். கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்தி லோ ஆகிவிடும். கண் பிசுபிசு வென்று ஒட்டிக் கொள்ளும், தூங்கி விழிக்கும்போது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.
கண் எரிச்சலோ, வலியோ ஏற்படும். சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும். களிம்புகள், சொட்டு மருந்து மூலம் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம். நோய்க்கிருமி தொற்றிய கண்களில் சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் வைத்து கண்கள் மேல், ஒரு நாளைக்கு, நான்கு முறை, 10 அல்லது 15 என்ற எண்ணிக்கையில் ஒற்றி எடுக்கலாம். இதனால் கண் வீக்கம் மற்றும் சிவத்தல் குறையும்.
கைகளை அடிக்கடி கழுவவும், கண்களின் அருகில் கைகளைக் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும். கண்களைத் தேய்க்கும் பழக்கத்தை அறவே கைவிடுவது நல்லது. கண் கூசினால் கூலிங்கிளாஸ் அணிந்து கொள்ளலாம். தலையணை உறையை தினமும் மாற்றிவிடுவது நல்லது. கண் வலி அதிகரித்து, கண் சிவந்து இருந்தால் உடனே கண் மருத்துவரை பார்ப்பதே சிறந்த வழியாகும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை பயன்படுத்தும் போது, கண்களையும், தொடும் முன் கைகளை நன்றாக கழுவ வேண்டும். கீழ் இமையை மெதுவாக கீழே தாழ்த்தி, பிறகு மேலே பார்க்க வேண்டும்.
சொட்டு மருந்தை கீழ் இமைப்பகுதியில் விட வேண்டும். விழிப்பாவையில் மருந்துகளை விடும் பழக்கம் பலரிடம் இருக்கிறது, இது தவறு. கண்களை மெதுவாக மூட வேண்டும், பிறகு சிமிட்டினால் மருந்துகள் கண்ணில் சமமாக பரவும். கண்ணில் களிம்பு இடுகையில், செய்கையில் மூக்கிற்கு அருகில் இருக்கும் கண் மூலைப்பகுதியில் கீழ் இமைப்பகுதியில் இட வேண்டும். கண்களை மெதுவாக மூடியபிறகு கண்களை லேசாக உருட்டினால் களிம்பு எல்லா இடங்களுக்கும் சீராக பரவும்.
கண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசியமில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது காரணமாக கூட
கண்கள் விரைவில் சிகப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும், தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம்.
பொதுவாக, கண்களுக்குக் கீழ் வீக்கம் வராமல் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். அவை ஆழ்ந்த தூக்கம்தான் கண் வீக்கத்தில் இருந்து விடுதலை கொடுக்கும். தூங்கும் நேரம் ஒவ்வொருவருக்கும் அவரவர் பணிச்சூழல், வாழ்க்கை முறைக்கேற்ப மாறுபடும்.
ஆனால், ஒருவர் நாள் ஒன்றுக்கு ஏழிலிருந்து ஒன்பது மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியம்.
தினமும் தூங்குவதற்கான நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திலேயே தூங்க முயற்சிக்க வேண்டும். தூங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுவது, புத்தகம் படிப்பது போன்றவை நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

%d bloggers like this: