எடப்பாடியாரை போட்டிபோட்டு புகழ்ந்த அமைச்சர்கள்! ஜெயலலிதாவுக்கு இணையான வரவேற்பு ஏன்!?
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு தொடக்க விழா, மதுரையில் நேற்று நடைபெற்றது. இதற்கான முன்னேற்பாடாக பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த பத்து நாள்களாக மதுரையில் நடைபெற்றுவந்தன. மதுரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி, பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காலை பத்து மணிக்கே மதுரை வந்துவிட்டார். விமான நிலையத்திலிருந்து விழா அரங்குவரை வழிநெடுகிலும் பல இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த பின் ஓய்வெடுக்கச் சென்றார்.
திட்டமிட்டால் கனவு வீடு கைகூடும்!
நம்மில் யாருக்கு இல்லை சொந்த வீடு வாங்கும் கனவு? எல்லோரிடமும் கனவு இருக்கிறது. ஆனால், தினப்படி செலவுகளும், திடீர் செலவுகளும் நம் மாதச் சம்பளம் மொத்தத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றன. இந்தச் செலவுகளையெல்லாம் மீறிச் சொந்த வீடு வாங்குவதெல்லாம் சாத்தியமா என்கிற கேள்வி பலருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு வருகிறதில்லையா?
பி.எஃப் பணம்: ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வது எப்படி?
நம் நாட்டில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் பி.எஃப் பணத்தை, ஆன்லைனில் எளிதாகப் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ), ஆரக்கிள் ஓ.எஸ் மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டரை டெல்லி அருகே உள்ள துவாரகாவில் அமைத்துள்ளது. இந்த டேட்டா சென்டருடன் நாடு முழுவதிலும் உள்ள 123 இ.பி.எஃப்.ஓ அலுவலகங்களும் இணைக்கப்படும்.
மூல நோயைக் குணப்படுத்தும் ஆகாயத்தாமரை!
ஆகாயத்தாமரை என்ற அழகான இந்த மூலிகைக்கு அந்தரத்தாமரை, வெங்காயத்தாமரை, குளிர்த்தாமரை, குழித்தாமரை, ஆகாயமூலி போன்ற பெயர்களும் உண்டு. இந்தத் தாவரத்தின் தண்டுகளில் காற்று நிரப்பப்பட்டிருப்பதால், இது நீரில் மிதந்தபடியே வாழ்கிறது. ஊதா நிறப் பூக்களைக்கொண்ட இது, நீரில் கூட்டம்கூட்டமாக வளரும் சிறு செடி வகை.
ஆகாயத்தாமரையின் இலையை அரைத்து கரப்பான் எனும் சரும
உள்ளாடைத் தேர்வில் உறுதியாக இருங்கள்!
உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும்கூட” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி.
உள்ளாடைத் தேர்வில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டிய விழிப்புஉணர்வுத் தகவல்களைப் பகிர்கிறார் அவர்.