Advertisements

ஈஸியாக ஸ்கேனிங் செய்ய உதவும் ஆப்ஸ்!

போட்டோ எடுப்பதற்காக மட்டுமே  பயன்பட்ட ஸ்மார்ட் போன் கேமராக்கள், தற்போது பலவிதங்களில் நமக்குப் பயன்படுகின்றன. வீடியோகால், இன்ஸ்டன்ட் வீடியோ, ஸ்டேட்டஸ் என அவற்றின் பயன்பாடுகள் அதிகரிக்க, அதிகரிக்க மொபைல் கேமராக்களின் திறனும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்படி ஸ்மார்ட் போன் கேமராக்கள் மூலம் செய்யக்கூடிய இன்னொரு விஷயம்தான், ஸ்கேனிங். இதற்குப் பயன்படுகிற இரண்டு கேட்ஜெட்டுகளைப் பார்ப்போம்.

ஆபீஸ் லென்ஸ் Office Lens

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பாக்கெட் ஸ்கேனர் ஆப்தான் இந்த ஆபீஸ் லென்ஸ். மொபைலின் கேமரா ஆப் போல, திறந்ததும் ஸ்கேன் செய்ய ரெடியாக இருக்கிறது இந்த லென்ஸ். அனைத்தையும் பொதுவாக ஸ்கேன் செய்யாமல், டாக்குமென்ட், வொயிட் போர்டு, போட்டோ, பிசினஸ் கார்டு என நான்கு ஆப்ஷன்கள் இதில் இருக்கின்றன. எனவே, எந்த மாதிரியான ஆவணங்களை ஸ்கேன் செய்கிறோம் என்பதைப் பொறுத்து, இதில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
இந்த ஆப்பில், ஆவணங்களை நாம் ஸ்கேன் செய்தால் மட்டும் போதும். ஆவணங்களின் இறுதி வடிவத்தை ஆட்டோமேட்டிக்காக அதுவே பிராசஸ் செய்துவிடுகிறது. இந்த ஆப்பின் ப்ளஸ், மைனஸ் இரண்டும் இதுதான்.
காரணம், இப்படி ஸ்கேன் எளிதாக இருந்தாலும், ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் போட்டோவை நாம் க்ராப் (Crop) செய்ய மட்டுமே முடியும். எந்தப் பகுதியை ‘கட்’ செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்யவோ, நமக்குத் தேவையான படி கலர், ப்ரைட்னஸ் உள்ளிட்டவற்றை மாற்றவோ முடியாது.
ஆவணங்களை ஸ்கேன் செய்து வெவ்வேறு ஃபார்மெட்களில் சேமிப்பதற் கேற்ப, எளிதான ஆப்ஷன்களைத் தந்துள்ளது மைக்ரோ சாஃப்ட். குறைவான வசதிகள் இருந்தாலும்கூட, ஆப் அளவு மட்டும் மிக அதிகமாக இருப்பது இதன் மைனஸ்.
டவுன்லோட் செய்ய: http://bit.ly/1GEbgqR


கேம் ஸ்கேனர் CamScanner

ப்படிப் புகைப்படங்கள் அல்லது ஆவணங்களை ஸ்கேனர்களில் ஸ்கேன் செய்து இமேஜ்-ஆக மாற்றுகிறோமோ, அதைப் போலவே மொபைல் கேமராக்களில் ஆவணங்களை போட்டோ எடுத்து, அவற்றை நாம் விரும்பும் ஃபார்மெட்களில் மாற்றிக்கொள்வதற்கு ஸ்கேனிங் ஆப்-கள் உதவுகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த கேம் ஸ்கேனர்.
புகைப்படங்கள் அல்லது முக்கியமான ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கேற்ற இலவச ஆப்தான் இந்த கேம் ஸ்கேனர். நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணங்களை, சிறிது வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து போட்டோ எடுத்தால் போதும். அந்த டாக்குமென்ட்டின் jpg அல்லது pdf ஃபார்மெட் ரெடி ஆகிவிடும். மொபைலில் போட்டோ எடுத்து பின்னர் நமக்குத் தேவையான அளவு மட்டும் கட் செய்து, எடிட் செய்து நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். 5 மெகா பிக்ஸல் கேமராக்களிலேயே தெளிவாக ஸ்கேன் செய்ய முடிகிறது. கேமராவின் திறனைப் பொறுத்து ஸ்கேனிங் தரமும் இருக்கும்.
இந்த ஆப் மூலம் முக்கியமான பில்கள், விளம்பரப் பலகைகள், விசிட்டிங் கார்டுகள், ஆவணங்கள், புகைப்படங்கள், சான்றிதழ்கள் என எதை வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து அவற்றை சாஃப்ட் காப்பிகளாக மொபைல், கணினி ஆகியவற்றில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். கேம் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யும் ஆவணங்களை உடனே பிரின்ட் எடுக்கவும், சமூக வலைதளங்கள் மூலமாகப் பகிர்ந்துகொள்ளவும் முடியும். முக்கியமான ஆவணங்களை பாஸ்வேர்டு கொண்டு லாக் செய்யவும் வழி இருக்கிறது. பயன்படுத்த மிக எளிமையாக இருப்பதும், அனைத்து மொபைல் களுக்கேற்றபடி இருப்பதும்தான் இதன் சிறப்பம்சம்.
டவுன்லோட் செய்ய: http://bit.ly/1nxrb0W

Advertisements
%d bloggers like this: