கொழு கொழு கன்னங்கள் பெற உதவும் சில டிப்ஸ்

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தரும். குஷ்பு, பிரபு முதல் ஹன்சிகா வரை கொழுகொழு கன்னங்களுக்காகவே அவர்களின் ரசிகர்களானவர்களை பார்த்திருக்கிறோம்.

குண்டான கன்னங்கள் சிலருக்கு கனவாகவே இருக்கும். ஒட்டிய கன்னங்கள் மிக அழகானவர்களையும் சுமாராகத்தான் காண்பிக்கும்.
இன்னும் கொஞ்சம் கன்னம் பூசியிருந்தால் நாம் அழகாய் இருப்போம் என்று நீங்கள் கண்ணாடியில் பார்த்து நினைத்ததுண்டா? அப்படியென்றால் இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்,. முயன்று பாருங்கள்.

தேவையானவை :

சப்போட்டா பழம் – 1
சந்தனம் – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்

செய்முறை :

சப்போட்டா வை மசித்து அதனுடன் சம அளவில் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தேயுங்கள். கன்னப்பகுதியில் பேஸ்டாக அப்ப வேண்டும்.
பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். வாரம் 3 நாட்கள் இப்படி செய்து பாருங்கள்.
ரத்த ஒட்டம் அதிகரிக்கும். கொலாஜன் அதிகமாக உற்பத்தியாகும். கன்னங்களில் சதை வளர்ச்சி தூண்டப்படும். இதனால் கன்னங்கள் அழகாக மாறும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு போட்டு 10 நிமிடங்கள் வாயில் வைத்திருங்கள். தினமும் இப்படி செய்தால் கன்னங்கள் குண்டாகும்.

%d bloggers like this: