Advertisements

ஏன்? எதற்கு? எதில்? – பைட்டோகெமிக்கல்ஸ் எனும் உயிர்ச்சத்துகள்

பைட்டோ கெமிக்கல்ஸ்…  மனித உடலின் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படக்கூடியவை. இவற்றிலுள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட், உயிர்ச்சத்துகள் எல்லாம் பலவிதங்களில் நமக்குப் பயன் தருபவை.

நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். உடல்பருமன், சர்க்கரைநோய், இதயநோய், குடல் புற்றுநோய் போன்றவை வராமலும் காக்கும்.  கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் நார்ச்சத்து நிறைந்திருக்கின்றது.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்

நமது செல்களைச் சிதைக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸைக் கட்டுப்படுத்த ஆன்டிஆக்ஸிடன்ட் உதவுகிறது. இதயநோய், ஆஸ்துமா, மூட்டுவலி, புற்றுநோய், சர்க்கரைநோய் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

சில முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

பீட்டா கரோட்டீன் (Beta-Carotene)

நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும். கண், தோல், எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்கும்.

மஞ்சள் பூசணி, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆரஞ்சு, புராக்கோலி, கீரை வகைகளில் அதிகம் உள்ளது.

லைகோபீன் (Lycopene)

இதய நோய் வராமல் தடுக்கும். திராட்சை, தக்காளி, தர்பூசணி, குடமிளகாய்களில் உள்ளது.

லூட்டீன் (Lutein)

கண் ஆரோக்கியம் காக்கும்; புற்றுநோயைத் தடுக்கும். கீரை, பசலைக்கீரை, லெட்யூஸ், முளைகட்டிய பயறு, பாகற்காய் போன்றவற்றில் உள்ளது.

ரெஸ்வெரட்ரால் (Resveratrol)

இதயம், நுரையீரல் ஆரோக்கியம் காக்கும்; புற்றுநோய்ப் புண்களை ஆற்றும். ரெட் ஒயின், வேர்க்கடலை, திராட்சையில் அதிகம் உள்ளது.

ஆந்தோசயானின் (Anthocyanin)

ரத்தக்குழாய்ப் பராமரிப்புக்கு உதவும். நாவற்பழம், பிளம்ஸ், சிவப்பு வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, ஸ்ட்ராபெர்ரியில் அதிகம் உள்ளது.

ஐசோஃப்ளேவன்ஸ் (Isoflavones)

மாதவிடாய்க் கால வலியைக் குறைக்கும்; மார்பகப்புற்றுநோயைத் தடுக்கும்; எலும்பு ஆரோக்கியம் காக்கும். சோயா பீன்ஸ், சோயா பால், ராஜ்மா, கொண்டைக்கடலையில் உள்ளது.

Advertisements
%d bloggers like this: