Daily Archives: ஜூலை 7th, 2017

பயங்கரவாதத்தின் பெயர் மாறுபட்டாலும் அதன் சித்தாந்தங்கள் ஒன்று தான்: பிரதமர் மோடி

ஹம்பர்க்: பயங்கரவாதத்தின் பெயர்கள் மாறுபட்டாலும் அவற்றின் சித்தாந்தங்கள் ஒன்றாகத் தான் இருக்கின்றன என ஜெர்மனியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், இந்திய பிரதமர் மோடி உள்பட பலநாட்டு தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, பாரீஸ் ஒப்பந்தத்தில் ஒரு மித்த கருத்து தேவை. பயங்கரவாதத்தின் பெயர்கள் மாறுபட்டாலும் அவற்றின் சித்தாந்தங்கள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இன்று நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பயங்கரவாதம். பயங்கரவாதத்திற்கு புகழிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும். நிதியுதவி கிடைப்பது தடுக்க வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகள் பலவீனமாக உள்ளன. இவ்வாறு மோடி பேசினார்.

எடப்பாடி ‘அஸ்திரம்’ தினகரன் ‘திடுக்’

னாதிபதி வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த், மீரா குமார் இருவரும் தமிழகத்தின் தலைநகரை முற்றுகையிட்டதுதான் கடந்த வார பரபரப்பு’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
“பி.ஜே.பி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் அமர்க்கள வரவேற்பு கொடுத்திருக்கின்றனவே?’’ என்றோம்.

Continue reading →

என்றென்றும் 16 ஆக இருக்க விருப்பமா…?

என்றும் 16′ ஆக இருக்க வேண்டும் என்பது, 60 வயது எட்டியவருக்கும் ஆசைதான்.
முகத்தில், லேசாக சுருக்கம் வந்தாலே, மனதும் சுருங்கி விடுகிறது பலருக்கு. உடலையும், மனதையும் இளமையாக வைத்து கொள்ள, உணவியல் நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்:
உண்ணும் உணவே, நமக்குள் அதிசயத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியம், தோற்றத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என்கின்றனர், உணவியல் வல்லுனர்கள். தினசரி, ஐந்து கப் பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு உட்கொள்ள வேண்டும்; புருக்கோலி, கேரட், ஆரஞ்ச் போன்றவைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Continue reading →

தினமும் தரும் பலன்!

உணவு வகைகளில், ருசிக்காகவும், மணத்துக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, பலர், சாப்பாட்டு தட்டில் ஓரங்கட்டுகின்றனர். ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள், ஏராளமான அடங்கியுள்ளன. கறிவேப்பிலையில், கார்போஹைட்ரேட்டுகள், பைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Continue reading →

புளி, கொடம்புளி மற்றும் புளிமா

அனைத்துவிதமான சமையலிலும் இடம் பிடிக்கும் ஒரு முக்கியப் பொருள் புளி. தற்போது நாம் பயன்படுத்தும் புளி, சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் நாட்டிலிருந்து அரேபிய வணிகர்கள் மூலம் அறிமுகமானது என்று சொல்லப்படுகிறது. இந்தப்புளியின் வருகைக்கு முன்னர் புளிப்புச் சுவைக்காகக் கொடம்புளி, புளிமா, புளிச்சக்காய் ஆகியவற்றைத்தான் நம் முன்னோர் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், இவை மூன்றும் நம் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவை.

Continue reading →