Advertisements

நோய்களுக்கு எதிரி அருகம்புல்!

புல், பூண்டுகளிலும் பல மருத்துவ குணங்கள் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம் அருகம்புல். அதனால் தான், நமது முன்னோர், அருகம்புல் மாலையை, விநாயகப் பெருமானுக்கு சாற்றி, அதை போற்றி, நமக்கு புரிய வைத்துள்ளனர்.

கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து நீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின், நீரை சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டுகள், வேர் என அனைத்துமே மருத்துவப் பயன்கள் கொண்டவை. அருகம்புல், தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தும் வல்லமை மிகுந்தது. சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்றுநோய்கள், உடற் சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.
இப்படி, உடலின் ரத்தத்தை சுத்திகரிக்கும் அரிய மூலிகையாக அருகம்புல் திகழ்கிறது. தவிர, புற்றுநோய் குணப்படுத்தும் தன்மை, சர்க்கரை நோயை சீராக்கும் வல்லமை, வயிற்றுப்போக்கை குணப்படுத்துவது, குமட்டல், வாந்தியை தனித்தல், நுண் கிருமிகள் பலவகையானவற்றை தடுத்தல், உற்சாகம் தரும் “டானிக்’காக செயல்படுதல், ரத்தத்தில் பிராணவாயுவை அதிகரித்தல், மாரடைப்பை தடுக்க உதவுதல், கிருமி தொற்றினை குறைத்தல், கருத்தடைக்கு உதவி செய்தல், உடலை குளிர்ச்சியாக வைத்திருத்தல், சிறு காயங்களுக்கு மேற்பூச்சு களிம்பாக பயன்படுதல் போன்ற பல்வகைகளிலும் பயன்படுகிறது.
அருகம்புல்லை இடித்து, சாறாக்கி அருந்தலாம்.
இதை தினசரி அதிகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்தல் சாலச்சிறந்தது. இதனால், ரத்தத்தில் எளிதாக கலக்கும் தன்மையும், குடலுக்குள் வேகமாக வினையாற்றும் தன்மையும் ஏற்படுகிறது. நாட்டு வெல்லம் சேர்த்தும், கரும்புச்சாறுடன் கலந்தும் அருகம்புல் சாறை அருந்தலாம். தற்போது, நாட்டு மருந்துக்கடைகள் அனைத்திலும் அருகம்புல் பொடி, பாக்கெட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன. அவற்றை வாங்கி, பாலிலோ, வெந்நீரிலோ கலந்தும் பயன்படுத்தலாம்.
வேதிபொருட்கள்: மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், பி.சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் “சி’ சத்தும் அடங்கியுள்ளன.
அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால், சேப்போனின்ஸ் சத்துகள் சிறுநீரை பெருக்க உதவுகின்றன. அருகம்புல் சாறு சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத்தன்மை வாய்ந்தது. பசியை தூண்டக்கூடியது. ஞாபகசக்தியை அதிகரிக்கவல்லது. வெண் குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது, ஆஸ்துமாவை விரட்டுவது, மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும், படை சொறி, சிரங்கு போன்றவற்றை குணமாக்குகிறது. தாய்ப்பாலை பெருக்க, கெட்டிப்பட்ட சளி கரைத்து வெளியேற்ற, மலமிளக்கியாக, வாந்தியை தடுக்க, ஈரல் நோய்களை கட்டுப்படுத்த என, யுனானி மருத்துவத்துக்கும் அருகம்புல் பரிந்துரைக்கப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: