Advertisements

மஞ்சளும் எலுமிச்சையும்…!

மஞ்சள் மிகப்பெரிய கிருமிநாசினி என்பது பலருக்கு தெரிந்த ஒன்று தான். இதனுடன் எலுமிச்சை கலந்து உட்கொண்டால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். மருத்துவ குணத்தின் காரணமாக, பல வைத்தியங்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது மஞ்சள். ஆராய்ச்சிகளிலும், மஞ்சள் உடலில் பல அற்புத மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என்று, ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் கொண்டு, உடலில் குறைந்தது, 150க்கும் மேற்பட்ட

பிரச்னைகளை சரிசெய்ய முடியும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய மஞ்சள் தூளை எலுமிச்சை சாறுடன் கலந்து, தினமும் காலையில் குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கின்றன.
வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாறு கலந்து, மஞ்சள் தூள் சேர்த்து பருகும் போது, உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, ஆரோக்கியத்தின் செயல்பாட்டுக்குள் துணை நிற்கிறது. எலுமிச்சை சாறுடன், மஞ்சள் தூள் மட்டுமின்றி, ஒரு சிட்டிகை பட்டை பொடியை கலந்து பருகி வந்தால், ரத்த சர்க்கரை அளவு சீராவதோடு, உள்காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். உணவு உண்ட பின் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் மஞ்சள் தூள் கலந்து பருகினால், பித்தநீரின் ஓட்டத்தை எழுப்பி, உணவுகளால் உடலில் தேங்கிய கொழுப்புக்கள் உடைத்தெறிய உதவும்.
இந்த பானத்தில், ஆற்றல்மிக்க அழற்சிக்கு எதிரான பண்புகள் உள்ளதால், இது முதுமை காலத்தில் மூளைச் செல்கள் சிதைவுற்று ஏற்படும் மூளை கோளாறுகளான அல்சைமர் மற்றம் டிமென்ஷியா போன்ற நோய்களை தடுக்கும். ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் காலையில், எலுமிச்சை சாறுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வர, நல்ல பலன் கிடைக்கும்.
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுவோர், இந்த பானத்தை தினமும் பருகி வந்தால், ஜீரண சக்தி மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். நீங்கள் எப்போதும் சோர்வை உணர்கிறீர்களா? அப்படியெனில், உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் பருகி வர வேண்டும்.
மஞ்சள், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உணவுகள் மற்றும் சுற்றுச்சூழலால், உடலுக்குள் சேரும் டாக்ஸின்களை உடைத்தெறியும். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பானத்தை கட்டாயம் பருக வேண்டும்.
பானம், பித்தப்பையில் பித்தநீரின் உற்பத்தியைத் தூண்டும். பித்த நீரானது உணவு சீராக செரிமானமாவதற்கு ஆதரவளிக்கும். பானம் பித்தகற்கள் உருவாவதைத் தடுக்கும். இந்த பானத்தல் ஆன்டிமைக்ரோபியல் பண்பு வலிமையாக இருப்பதால், இதை தொடர்ந்து பருக நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படும்.
கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் ஏற்படும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது. மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும், குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.
இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப்போக்க கஸ்தூரி மஞ்சளை பொடித்து அல்லது குழைத்து, முகத்தில் பூசிக் கழுவி வந்தால், முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.

Advertisements
%d bloggers like this: