Advertisements

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

டு தேடி வரும் டென்ட்டிஸ்ட்!

பல் சிறப்பு மருத்துவர்கள் பலரின் பதில்கள், அவசரக் காலங்களில் என்ன செய்ய வேண்டும், பல்வலி மற்றும் அது பற்றிய பயங்களைப் போக்க உதவும் டிப்ஸ், குழந்தைகளின் பற்களைப் பரமாரிப்பது எப்படி என 360 டிகிரியிலும் தகவல்களை அள்ளித் தருகிறது இந்த ஆப். நல்ல பல் மருத்துவரை எப்படித் தேர்ந்தெடுப்பது, மருத்துவச் செலவுகளைக் குறைப்பது எப்படி என்பதையும் சொல்லித் தருகிறது. இதையெல்லாம் கிராஃப், படங்கள் என அழகான முறையில் தந்திருப்பதும் நல்ல விஷயம்.

ஆப்பிள் ஸ்டோர்: https://itunes.apple.com/us/app/dental-expert/id361840214?mt=8

ஸ்மைல் ப்ளீஸ்!

சிலருக்குப் பற்கள் முன்பக்கமாக வந்திருக்கும். அதைச் சரி செய்ய க்ளிப் போன்ற அட்டாச் மென்ட்டைச் சிலகாலம் அணிந்திருப்பார்கள். அவைதான் braces. இந்த ஆப், பிரேஸஸ் அணிந்திருப்பவர்களுக்கு உதவுகிறது. பிரேஸஸில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதைச் சரி செய்ய உதவும் படங்களும் வீடியோக்களும் இந்த ஆப்பில் நிறைய உள்ளன. மருத்துவர்களின் பரிந்துரைகளுமுண்டு. Siri தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஆப்-லிருக்கும் அனைத்துத் தகவல்களையும் ஆடியோவாகவும் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க வசதி.

ஆப்பிள் ஸ்டோர்: https://itunes.apple.com/us/app/braceshelp/id980287092?mt=8

Advertisements
%d bloggers like this: