எக்ஸிமா (அரிப்புடன் கூடிய தோலழற்சி)
எக்ஸிமா என்ன செய்யும்? சருமப்பகுதிகள் வீங்கும். அரிப்பெடுக்கும். சிவந்தும் தடித்தும் போகும். அரிப்பில் ஆரம்பித்து, சொறியாக மாறி, போகப்போகச் சருமம் வறண்டு, தடித்துப்போகும். கடைசியாகத் தோல் உரியத் தொடங்கும். சிலருக்குப் பாதிப்பின் தீவிரம் அதிகமானதன் காரணமாக அந்த இடத்திலிருந்து நீர் வடியத் தொடங்கும். அதன் மேல் ஓடு போன்று உருவாகும்.