கறிவேப்பிலைக்கு நல்ல குணமிருக்கு!

“கறிவேப்பிலை போல் என்னை பயன்படுத்திக் கொண்டு விட்டனர்’ என்று, பலரும் சொல்லக் கேட்பதுண்டு. அதாவது, காரியம் முடிந்ததும், தன்னை கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விட்டனர் என்பது அத்தகையவர்களின் புகாராக இருக்கும்.
உண்மையில், கறிவேப்பிலையின் அருமை பெருமை தெரியாதவர்கள்தான், அவ்வாறு உணவில் இருக்கும் கறிவேப்பிலையை தூக்கி வீசுவர்.

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அது தவிர, மனித உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஏராளமான சத்துக்கள் அதில் உள்ளன. அதை பொடியாகவோ, சமையலில் சேர்த்தோ உண்பதன் மூலம், நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
கறிவேப்பிலையை பச்சையாக அரைத்து தேன் கலந்து தினமும் உண்டு வந்தால், தீராத உதிரப்போக்கு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இதன் மூலம் ரத்த சோகை பிரச்னையால் அவதிப்படும் பெண்களுக்கு நல்ல பயன் கிடைக்கும்.
முடி கொட்டுதல் உள்ளிட்ட பெண்களின் கேசப் பிரச்னைகளுக்கு, கறிவேப்பிலை, நல்ல மருந்தாக பயன்படுகிறது. அதை அரைத்து, முடியின் வேர்களில் படும் வகையில் தேய்த்து விட வேண்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உலர்ந்தபின், அலசிக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால், முடி நன்கு வளரும்.
கறிவேப்பிலையின் சாறு, பெண்களுக்கு பேறு காலத்தில் ஏற்படும் சோர்வை போக்க வல்லது.
செரிமான கோளாறுகளை போக்கும்; உடல் பலம் பெறவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்கள் மற்றும் உப்பெரிச்சலை போக்கவும், கறிவேப்பிலை சாறு உதவும்.
வேப்பங்குச்சியை போலவே, பல் துலக்கவும், கறிவேப்பிலையை செடியில் இருந்து முறிக்கப்பட்ட குச்சிகளை பயன்படுத்தலாம். இதன் மூலம், பல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். கறிவேப்பிலையை காய வைத்து, பொடியாக்கி, லேசாக உப்பு, காரம் மட்டும் சேர்த்துக் கொண்டால், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்வதற்கு, அருமையாக இருக்கும்; இந்த பொடியானது, உடலுக்கு வலு சேர்க்கும் தன்மை கொண்டது.
முடி வளர்ச்சிக்கு வெள்ளரிச்சாறு முடி வளர்ச்சிக்கு பெண்கள் வெள்ளரிச்சாறு அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர் தரமான சிலிகானும், சல்பரும் முடி வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட் சாறு, இரு தேக்கரண்டி பசலைக் கீரைச்சாறு, பச்சடிக் கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும். செரித்தல் அதிகம் ஏற்படுவதால் பசி அதிகமாகும்.
வெள்ளிரியை உண்பதால் ஜீரண நீர் சுரக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இது மலத்தைக் கட்டுப்படுத்தும், பித்தத்தை குறைக்கும், உள்ளரிப்பு, கரப்பான் போன்ற சரும நோய்களைப் போக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.

%d bloggers like this: