அ.தி.மு.க-வை கைப்பற்றும் திவாகரன்! – ‘திடுக்’ தினகரன்
அ.தி.மு.க-வைக் கைப்பற்றுகிறார் திவாகரன். அவரது படத்தை எடுத்து வையும்” என்று வாட்ஸ்அப் தகவல் அனுப்பிய வேகத்தில், கழுகார் நம் முன் ஆஜரானார்.
‘‘இது என்ன விவகாரம்? அவர்கள் குடும்பத்துக்குள் ஏதோ சமாதானப் படலம் நடந்ததாகவும் தகவல் பரவியதே?” என்ற கேள்வியைப் போட்டு தொடங்கி வைத்தோம்!
‘‘அப்படி ஒரு பேச்சுவார்த்தையே நடக்கவில்லை என்று தினகரன் ஒரு பேட்டியில் அதிரடியாக மறுத்திருக்கிறாரே! ‘என்னிடம் இப்படி கேள்வி கேட்டிருந்தால், ‘நீர் அடித்து நீர் விலகுமா?’ என்று மட்டுமே பதில் சொல்லியிருப்பேன். முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் தினகரன். யார் என்ன செய்தாலும், இந்த ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சவால் விட்டாராம் நடராசன். இந்தச் சூழலில், இப்போது சசிகலா குடும்பத்துக்குள் யார் பெரியண்ணன் என்ற கோதா தொடங்கிவிட்டது.”
அச்சுறுத்தும் அனீமியா – அலெர்ட் ஆலோசனைகள்
நல்ல உடல்வாகும் வசதியான பொருளாதாரப் பின்னணியும் கொண்ட அவள், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். தன் தோழிகளுடன் ஒருமுறை ரத்த தான முகாமில் கலந்துகொண்டாள். அவளுடன் வந்திருந்த அனைவரும் ரத்த தானம் செய்தார்கள். ஆனால், அவளை மட்டும் ரத்த தானம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. காரணம், அவளுக்கு ரத்தத்தில் போதுமான அளவு