Advertisements

போராடு அல்லது தப்பியோடு!

டபடப்பான சூழலிலோ, பதற்றமான தருணங்களிலோ வயிற்றிலிருந்து நெஞ்சுக்குழிக்குள் ஏதோவொன்று உருள்வதைப்போல உணர்ந்திருக்கிறீர்களா?

அறிவியல் அதை அட்ரீனலின் ரஷ் என்கிறது. அதென்ன அட்ரீனலின் ரஷ்? அது என்ன செய்யும்?

அட்ரீனலின் என்பது மனஅழுத்ததைக் கட்டுப்படுத்தும் பொருட்டுச் சுரக்கும் ஒருவகைச் சுரப்பி. சிறுநீரகக் குழாயின் மேல்புறத்தில் இருக்கும் அட்ரீனல் சுரப்பியின் வாயிலாக இது சுரக்கும்.

அட்ரீனல் சுரப்பியின் பிரதான வேலை, அட்ரீனலின், கார்டிசோல், அல்டோஸ்டீரோன் போன்ற சுரப்பிகளைச் சுரப்பதுதான். இதிலுள்ள அட்ரீனலின் சுரப்பி அளவுக்கதிகமாகச் சுரக்குமேயானால், அதுவே ‘அட்ரீனலின் ரஷ்’ எனப்படும்.

எப்போதெல்லாம் ஏற்படும் அட்ரீனலின் ரஷ்?

சில சமயங்களில் மூளை இச்சுரப்பிக்கு நேரடிக் கட்டளை விதிக்கும். அப்போதுதான், அட்ரீனல் அதிகமாகச் சுரந்து அட்ரீனலின் ரஷ்ஷை ஏற்படுத்தும். உதாரணமாக, பயம், மகிழ்ச்சி, சோகம், மனஅழுத்தம் முதலிய உணர்வுகள், சாகசங்களில் ஈடுபட்டுத் திடீரென அதிகமாகும் சமயம், அதிர்ச்சி/ஆச்சர்யம் தரும் விஷயங்கள் போன்றவற்றின்போது வெளிப்படும் முன்னறிவிப்பில்லாத அதீத உணர்ச்சி வேகத்தினால் அட்ரீனலின் ரஷ் ஏற்படும்.

சோகம், மகிழ்ச்சி, பயம் என எல்லாமே சராசரி உணர்வுகள் தாம். அந்த உணர்வுகள் ஒருவருக்குள் ஏற்படுமாயின், மூளை அவற்றை மதிப்பீடு செய்யும். அதீதமாக, சட்டென ஓர் உணர்ச்சி அதிவிரைவாகத் தூண்டப்படும்போது, மூளையினால் அதனை மதிப்பீடு செய்யமுடியாமல் போய்விடும். அதுபோன்ற சமயங்களில், பரிவு நரம்பு அமைப்பிடம் (Sympathetic Nervous System) அப்பணியைத் தந்துவிடும். அந்த நரம்பமைப்பு, மூளையின் அடிப்பகுதியான ஹைப்போதாலமஸ் என்ற பகுதியின் உதவியோடு, அபாய அறிவிப்பொலியை உடலுக்குத் தரும். இந்த அறிவிப்பொலி சட்டென்று சிறுநீரகத்தின் மேல்பரப்பில் இருக்கும் அட்ரீனல் சுரப்பியை, அதன் ஹார்மோன்களைச் சுரக்கும் பொருட்டு வேகமாகத் தூண்டிவிடத்துவங்கும். அவ்வாறு அட்ரீனல் சுரப்பி அதிவிரைவாகத் தூண்டப்படும்போது, அட்ரீனலின், நார்-அட்ரீனலின், கார்டிசோல் என்ற மூன்று ஹார்மோன்கள் ஒரே நேரத்தில் வெளியாகும். இந்த நிலையினை ‘ஃபைட் ஆர் ஃப்ளை’ என்பர். (போராடு அல்லது தப்பியோடு என்ற நிலை). உடலில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை, நேரடியாக ரத்த ஓட்டத்தில் சென்று கலக்கும். இப்படி ஆகும்போது, ஆற்றல் திறன் ஏறத்துவங்கும்.

அட்ரீனல் அதிகமாகச் சுரந்தால் என்ன ஆகும்?

ஒருவர் உடம்பில் அட்ரீனல் சுரப்பி அதிகமாகச்  சுரக்கும்போது, அவர்களது ஆற்றல் திறன் எப்போதையும் விடப் பலமடங்கு அதிகமாகும். உதாரணமாக, ஜிம்மிலிருக்கும்போது ஒருவருக்கு அட்ரீனல் அதிகமாகச் சுரக்குமேயானால், ஆற்றல் அதிகமாகி, முன்பு எப்போதும் இருப்பதைவிட அதிகமான செய்கைகளைச் செய்வார். உதாரணமாக, மிகவும் அதிமான அளவு வெயிட் தூக்குவார்; வொர்க்அவுட் செய்வார். இன்னும் சிலருக்கு அட்ரீனலின் ரஷ் அதிகமாகி, கார் ஒன்றினைத் தூக்கிக்காட்டும் அளவிற்கான மாபெரும் சக்தியும் ஆற்றலும் கிடைக்கப்பெறும். இப்படிச் செய்பவர்களைக் கண்டு வியக்காமல், பைத்தியக்காரத்தனமானவன் என்றெல்லாம் கூறி ஒதுக்காமல், அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.

அறிகுறிகள்:

காயங்கள் வலிதராமல் போகும். தசைப்பிடிப்பு, சிராய்ப்புகள்  ஏற்படும். எலும்புமுறிவு ஏற்பட்டாலும்கூட வலி தெரியாது. அட்ரீனலின் ரஷ்ஷினால் வரும் அதீத ஆற்றல், வலிதரும் உணர்வுகளை முழுவதுமாகக் குறைத்து விடும். அட்ரீனலின் சுரக்கும் பணி குறையும் போதுதான் வலி எடுக்கத் துவங்கும்.

திடீரென்று ஆற்றல் திறன் பெருகுவதை உணரலாம். விளையாடும்போதோ, சமைக்கும்போதோ, ஏதாவது வேலை செய்யும்போதோ, பேசிக்கொண்டிருக்கும்போதோ உடல் களைப்பு என்ற வார்த்தைக்கே இடமளிக்காமல் சுழல்வர். அந்தச் சமயத்தில் அருகில் இருப்பவர்கள் கடினமாக நினைக்கும் விஷயங்களை இவர்கள் மிகவும் எளிதாகச் செய்வர்.

எல்லா செய்கைகளையும் வேகமாகச் செய்யும்போது மூச்சுக்குழாயில் மூச்சுத்திணறல் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமாகி, அதிகளவில் வியர்க்கத் துவங்கிவிடும். இதயம் வேகமாகத் துடிப்பதை உணர முடியும். தசைகள் இறுகும். அதிகம் வியர்க்கும்.

எப்படித் தடுப்பது இப்பிரச்னையை?

உடலும் மனதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டேதான் இருக்கும். ஒரு சம்பவம் நடக்கும்போது, மூளை அதனை மதிப்பீடு செய்யும். அந்த மதிப்பீடு, எண்ணங்களைத் தாக்கத் துவங்கும். எனவே, மனதையும் உடலையும் கட்டுக்குள் வைக்கும்படியான செயல்களைச் செய்வது மட்டுமே இந்தப் பிரச்னையிலிருந்து ஒருவரைக் காக்கும்.

பொறுமையாக, மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்யும்போது, இதயத்தின் செயல்பாடு சீராகி, ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். பதற்றத்தினால் உடலின் தசைப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கம் விலகி உடல் சகஜ நிலைக்குத் திரும்பும்.

வேறு ஒரு விஷயத்தை நோக்கி மனதின் போக்கைச் செலுத்தும்போது, அட்ரீனல்  சுரக்கும் அளவு குறையும். அதனால், பதற்றம், கோபம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகள் அளவுக்கு அதிகமாக வெளிவருவது உங்களுக்குத் தெரிந்தால், உடனே வேறு ஏதாவது விஷயத்தை யோசிக்கலாம். 1-10 வரை எண்ணுவது, பாடல் பாடுவது, சிறிது நேரம் தியானம் செய்வது, புத்தகம் வாசிப்பது, வீட்டின் செல்லப்பிராணிகளோடு நேரம் கழிப்பது போன்ற விஷயங்களைச் செய்யலாம்.

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, தியானம் போன்றவற்றைச் செய்யலாம். பதற்றம், மனஅழுத்தம், கவலை முதலிய விஷயங்களிலிருந்து விலகியிருக்கும்போது அட்ரீனலின் ரஷ் முழுவதுமாகச் சரியாகிவிடும்.

சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமாகச் சிந்திக்காமலிருப்பது நல்லது. நாள் ஒன்றுக்கு, 7 முதல் 9 மணி நேரம் வரையிலான தூக்கம் அவசியம்.

வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: