Advertisements

ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்புகள்

ஹெபடைட்டிஸ்… இது கல்லீரலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ். இதில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தேவையான தடுப்பு முறைகள் போன்றவற்றை இங்கே பார்ப்போம்.

ஹெபடைட்டிஸ் வைரஸின் வகைகள் மற்றும் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன?

ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, இ, ஜி எனப் பல வகைகள் உள்ளன. ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ்கள், தண்ணீர் மற்றும் உணவு ஒவ்வாமையால் ஏற்படும். அசுத்த நீரில் கைகால்களைக் கழுவுவது, வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் இந்தவகை வைரஸ்களால் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் மஞ்சள் காமாலைக்கும் பின்னாள்களில் கல்லீரல் பாதிப்புக்கும் வழி வகுக்கும்.

ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ்கள் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துபவை. பி வைரஸ் ரத்தத்தின் மூலம் பரவக்கூடியது. இதனால் ஏற்படும் மஞ்சள்காமாலையை குணப்படுத்தவே முடியாது. சில நேரங்களில், ஹெபடைட்டிஸ் டி வரவும் வழிவகுக்கும்.

நுரையீரலில் வீக்கம் ஏற்படுவதுதான் ஹெபடைட்டிஸ் சி வைரஸின் தொடக்கம். சிகிச்சைகள் மேற்கொள்ளாதபட்சத்தில் இவை பெரும்பாலும்  நுரையீரல் செயலிழப்பு, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

ஹெபடைட்டிஸ் டி வைரஸ், நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தாது. மாறாக, பி வகை வைரஸோடு சேர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை. நோய் பாதிப்பு ஏற்பட்ட உடனேயே சிகிச்சை தொடங்குவதன் மூலம், நுரையீரல் பாதிப்புக்குள்ளாகாமல் காப்பாற்ற முடியும்.

ஹெபடைட்டிஸ் இ வைரஸால் மஞ்சள்காமாலை பிரச்னை மட்டுமே வரும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இவ்வகை வைரஸினால் மஞ்சள்காமாலை ஏற்பட்டால், தாய் – சேய்  இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

ஹெபடைட்டிஸ் ஜி வைரஸால் கல்லீரல் ஃபைப்ரோஸிஸ், வீக்கம் போன்றவை ஏற்படும். மிகவும் அரிதாகவே ‘ஜி’ வகை பாதிப்புகள் ஒருவருக்கு ஏற்படும்.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அல்லாமல், மஞ்சள்காமாலை நோய் ஏற்படும் அறிகுறிகள் யாவும் அனைத்து வகை ஹெபடைட்டிஸ் வைரஸ்களுக்கும் பொதுவாகவே இருக்கும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பார்த்து, ஒருவருக்கு என்ன வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்படும். அறிகுறிகள் எதுவுமே ஏற்படுத்தாத வைரஸ் வகைகளும்  உள்ளன. உதாரணமாக, சி வகை வைரஸ், மிகவும் மெதுவாகவே தெரியவரும். சிலருக்கு ஆறு மாதங்களிலும் இன்னும் சிலருக்கு பல வருடங்களுக்குப் பிறகும்கூட தெரியவரும். இத்தகைய வைரஸ், கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும்.

இந்தப் பாதிப்புகளுக்குத் தீர்வுகள் உண்டா?

ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ், உடலுக்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பதால் இதற்குச் சிகிச்சைகள் தேவைப்படாது. உணவு முறைகளில் கவனம் எடுத்துக்கொள்வதே போதுமானது. பாதிப்புகள் மிகவும் தீவிரமாகும் போது, கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யவேண்டியிருக்கும். நீர் ஒவ்வாமையினால் இது ஏற்படும் என்பதால், கொதிக்கவைத்த நீரை எடுத்துக்கொள்வது நல்லது.

ஹெபடைட்டிஸ் பி வகையில் பாதிப்புகள் மிகவும் குறைவாகவேயிருக்கும். பாதிப்புகள் அதிகரிக்கும்போதும்கூட, அறிகுறிகள் தெரிவது மிகவும் குறைவு. இது, பல வருடங்கள் வரைகூட வெளியே தெரியாமல் இருக்கக்கூடும். உணவு முறைகளில் கவனம் செலுத்தினாலே இதனைச் சரிசெய்துவிடலாம். ஹெபடைட்டிஸ் சி வைரஸ்களுக்குச் சிகிச்சை கண்டறியப் படவில்லை. கல்லீரல் மாற்று சிகிச்சை முறையிலும் இந்த வகை வைரஸ்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றபோதிலும், பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து அதனைக் கட்டுக்குள் வைக்கும் சிகிச்சைகள் அளிக்கப் படுகின்றன.

இன்னபிற வகை வைரஸ்கள், தன்னிச்சையாகச் செயல்படாது. பி அல்லது ஏ வகையோடு சேர்ந்து பாதிப்பை அதிகரிக்கும். ஆகவே, அது ஏற்படுத்தும் பாதிப்பின் வீரியத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். மேலும், இதன் அறிகுறிகளும் குறைந்தே காணப்படும். சில நேரங்களில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியாமல் கடந்து செல்வதால் பின்னாள்களில் (சுமார் 20 வருடங்கள் கழித்து  தெரியவரும்போது), அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடும். இது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்யப்படும். ஆனால், நோய் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமித்தொற்று முழுவதுமாக அழியாது. இதற்கான சிகிச்சைகள் இன்னமும் முழுமையாகக் கண்டறியப் படவில்லை.

மற்றவர்களுக்குத் தொற்றாமலிருக்கத் தடுப்புமுறைகள் உண்டா?

பாதிப்பு ஏற்பட்டிருக்கும் ஒருவரோடு நீர் மற்றும் உணவுகளை  ஷேர் செய்யக்கூடாது. சுகாதாரமான முறையில் வாழ்வது மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும். சத்தான பழ வகைகளை உண்பது, சத்தான உணவைச் சாப்பிடுவது, கை கழுவிவிட்டுச் சாப்பிடுவது, பாத்ரூமிலிருந்து வந்தவுடன் கைகால்களை நன்கு கழுவுவது போன்றவை சிறந்த தடுப்புமுறைகள்.

ரத்தத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இது பரவுக்கூடும் என்பதால் ஊசி, டூத் பிரஷ், ரேசர் முதலியவற்றை ஷேர் செய்யக்கூடாது. மேலும், ஊசி போடுதல், ஷேவிங் செய்தல் போன்ற பணிகளைச் செய்பவர்கள் கையில் உறை அணிந்துகொண்டு செய்ய வேண்டும்.

ஹெபடைட்டிஸ் பி வகையால் பாதிப் படைபவர்கள் அதிகம் என்பதால், பிறந்த குழந்தைக்கு 24 மணி நேரத்திற்குள் தடுப்பூசி போடப்படும். கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் கண்டிப்பாக அளிக்கப்படும் தடுப்பூசி இது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: