Advertisements

புரதம் என்கிற அமுதம்!

ம் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்பட, ஊட்டச்சத்துகள் அவசியம்’  எனத் திரும்பத் திரும்ப அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இவற்றில் மிக முக்கியமானது `புரோட்டீன்’ (Protein) எனப்படும் புரதச்சத்து. இது போதுமான அளவுக்குக் கிடைக்காதபோது நோய்கள், தொற்றுகள், உடல்சோர்வு, செயல்திறன் குறைவு… எனப் பல விளைவுகள் ஏற்படும். ஆனாலும் இது குறித்த

விழிப்புஉணர்வு, அதிகம் படித்தவர்கள் மத்தியிலேயே இன்னமும் ஏற்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதை வலியுறுத்தும் வகையில் வெளியாகியிருக்கிறது, இந்தியாவில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட  ஓர் ஆய்வு முடிவு. அதாவது, `இந்தியாவில், சைவ உணவு உண்பவர்களில் 90 சதவிகிதம் பேரும் அசைவ உணவு உண்பவர்களில் 85  சதவிகிதம் பேரும் புரதச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்’ என்கிறது.

`இந்தியாவில் அதிகரித்திருக்கும் புரதச்சத்துக் குறைபாட்டுக்கு வறுமை மட்டுமல்ல; சரியான ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகள் எவை என்பது குறித்த மக்களின் அறியாமையும் காரணம்’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன, அறிகுறிகளைக்கொண்டு அதை எப்படி அடையாளம் காண்பது, அதற்கான தீர்வுகள்  யாவை என்பனவற்றையெல்லாம் பார்க்கலாம்.

 

புரதச்சத்துக் குறைபாடு (Protein Deficiency)

புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச் சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலுச்சேர்க்கும். என்சைம், ஹார்மோன், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாக, புரதம் அவசியம். செல்களைப் புதுப்பிக்கவும் காயம், புண் போன்றவை ஆறவும் இது உதவும். அதோடு, நோய் எதிர்ப்புச்சக்தி உருவாக்கத்துக்கும் தேவையான ஒன்று. புரதச்சத்தை நாம் உணவின் மூலமாகப் பெறுவதே நல்லது. இந்தச் சத்து உடலுக்குப் போதுமான அளவுக்குக் கிடைக்காமல் போகும் நிலையையே, `புரதச்சத்துக் குறைபாடு’ (Protein Deficiency) என்கிறோம்.

 

யாருக்கு வரும்?

இந்தக் குறைபாடு ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியோர்கள் எனப் பாலினம், வயது வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும் வரலாம்.   

எப்படி அறிவது?

* தலைமுடி நிறம் மாறுதல், அடர்த்திகுறைதல், எளிதில் உடைந்துபோதல், உதிர்வு போன்ற பிரச்னைகள் அதிகமாகும்.

* நகங்கள் எளிதில் உடைந்து போதல், நகங்கள் தடித்துப்போதல் அல்லது தோலில் வறட்சி உண்டாதல்.

* பாதிக்கப்பட்டவர்கள் உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் காணப்படுவர்; எளிதில் எரிச்சல் அடைவார்கள்.

* அடிக்கடி காய்ச்சல், தலைவலி ஏற்படும். எளிதில் தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டாகும்.

* குழந்தைகளுக்கு வயிற்றின் தொப்பை மட்டும் பெரிதாகி கை, கால்கள் குச்சிபோல காணப்படும்.

* உடல் மெலிந்து, பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாகக் காணப்படுவர்.

பாதிப்புகள்

உடல்சோர்வு, பலவீனம், மனஅழுத்தம், மனச்சோர்வு ஆகியவை ஏற்படும். மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். வளர்சிதை மாற்றம் குறையும். குழந்தைகளுக்கு வளர்ச்சி பாதிக்கும். தொற்று நோய்கள் எளிதில் பரவும். உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால், அது விரைவில் ஆறாது. மராஸ்மஸ் (Marasmus)  எனப்படுகிற உடல் இளைப்பு மற்றும் குவாஷியோர்கர் (Kwashiorkor) எனப்படுகிற  புரதக் குறைபாட்டுப் பிரச்னையும் உண்டாகலாம்.

எவ்வளவு புரதம் தேவை?

`ஒருவர் நாளொன்றுக்குத் தங்கள் உணவில் சராசரியாக 50 முதல் 65 கிராம் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று தேசியச் சுகாதார நிறுவனம் (National Institute of Health) பரிந்துரைக்கிறது. ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் ஒவ்வொரு கிராம் புரதம் தேவை. அதாவது, உங்கள் உடல் எடை 50 கிலோ என்றால், தினமும் 50 கிராம் புரதம் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் வேலை பார்க்கும் தன்மை, தேவையின் அடிப்படையில் இந்த அளவு நபருக்கு நபர் வேறுபடும். எனவே, உணவியல் நிபுணர்களின் ஆலோசனையின்படி எடுத்துக்கொள்வது சிறந்தது.


உணவுகள்

சைவம் சாப்பிடுபவர்கள் பால் பொருள்கள், சோயா, காளான்,  நட்ஸ்,  பருப்பு வகைகள், பயறு மற்றும் முளைகட்டிய பயறு வகைகள் மூலமாகவும், அசைவம் உண்பவர்கள் மீன், முட்டை,  இறைச்சி போன்ற உணவுகள் மூலமாகவும் புரதச்சத்தைப் பெறலாம்.


டிப்ஸ்

*
தினமும் ஏதாவது ஒரு பருப்பு வகையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.


*  விளையாட்டு வீரர்கள், தினமும் உடற்பயிற்சி செய்வோர் ஆகியோருக்கு அதிகப் புரதம் தேவை. எனவே, அதிகப் புரதச்சத்துள்ள உணவுகள் அல்லது புரோட்டீன் சப்ளிமென்டரி உட்கொள்ளலாம். உணவியல் நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகு சப்ளிமென்டரி எடுத்துக்கொள்வது நல்லது.

* குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், பாலூட்டும் தாய்மார்கள் புரதம் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் தினசரி ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும். அவர்களுக்குப் பால் பிடிக்கவில்லை என்றால், பன்னீர் போன்ற பால் பொருள்களைக் கொடுக்கலாம்.

* அரிசி சாதம், பருப்பு, இட்லி, அடை தோசை, வேர்க்கடலைச் சட்னி,  சாம்பார்,  சென்னா மசாலா போன்றவற்றில் அதிகளவு புரதம் உள்ளது.

* விபத்தில் காயமடைந்தவர்கள், அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், நோய்த்தொற்று உள்ளவர்கள் அதிகளவில் புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

* தீ விபத்தில் தோல் பாதித்தவர்களுக்கு, புதிய தோல் உருவாகப் புரதம் அவசியம். எனவே, அவர்களும்  புரதச் சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

* அசைவ உணவுகளில்தான் அதிகளவு புரதச்சத்து இருக்கிறது. என்றாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு சோயா அல்லது பால் பொருள்கள் சிறந்த மாற்று உணவுகள். அதாவது, 250 கிராம் சோயா பீன்ஸில் கிடைக்கும் புரதச்சத்து, மூன்று லிட்டர் பால் அல்லது ஒரு கிலோ இறைச்சி அல்லது 24 முட்டைகளில் உள்ள புரதச்சத்துக்கு நிகரானது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: