நச்சு தன்மை அகற்றும் பீன்ஸ்

நாம் சாப்பிடும் உணவில், தானியம் அல்லது மாமிசம், முக்கிய இடம் பிடிக்கின்றன. இதில் எதை சாப்பிட்டாலும் அவற்றுடன் காய்கறிகள், பழங்களை சேர்த்து உண்ண வேண்டும்; இதனால், சமச்சீரான உணவு, சத்துள்ள உணவாகவும் அமையும்.
நாம் சாப்பிடும் காய்கறிகளில் ஒவ்வொன்றிலும், ஏதோ ஒரு விசேஷ மருத்துவ குணம் அடங்கியிருக்கிறது. இதில், பீன்ஸ், அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பீன்ஸில், கலோரி அளவு குறைவாகவும், வைட்டமின், தாதுக்கள் அதிகமாகவும் உள்ளன. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தேங்கியுள்ள நச்சுத்தன்மைகளை வெளியேற்றும்.

நார்ச்சத்தானது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து, கொழுப்பை சத்தாக மாற்றுகிறது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து, 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது, குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது: புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உண்டு. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள “ப்ளேவோனாய்டுகள்’ புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும். சிறுநீரக கல் பிரச்னைக்கு சிறந்த மருந்து பீன்ஸ். இந்த நோயால் அதிகம் அவதிப்படும் நோயாளிகளுக்கு, பீன்ஸ் சிறந்த மருந்தாகும். ரத்தம் உறையாமல் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகள் பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நோயின் தாக்கம் குறையும். எலும்பு அடர்த்தியை அதிகப்படுத்தும்.
வைட்டமின் “பி6′, தயாமின், வைட்டமின் “சி’ அதிகம் இருப்பதால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இரும்புச்சத்தைக் கிரகித்து, செரிமான சக்தியை அதிகரிக்கும். வாய்வு தொல்லையை நீக்கும். இரைப்பை பிரச்னைகள் சரியாகும்.
பீன்ஸில் உள்ள வேதிப்பொருள், சருமத்தையும், கண்களையும், புற ஊதாக்கதிர்களின் தாக்குதலில் இருந்து தடுக்கிறது. இதிலுள்ள வைட்டமின் “பி12′ சத்து, கருவுற்ற பெண்களுக்கு, கருவில் குழந்தை நன்கு வளரவும், நரம்பு பாதிப்புகள் ஏற்படாதவாறும் தடுக்கிறது.
சீராகும் இருதய துடிப்பு: மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் குறைத்து இருதயத் துடிப்பை சீராக்குகிறது. மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பீன்ஸை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம். அதற்கு இது சிறந்த மருத்துவம். பீன்ஸை, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய நீரில், முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
சருமத்தைப் பாதுகாத்து வியர்வையை தூண்டும். தொண்டைப்புண், வறட்டு இருமல், நாவறட்சி, கை, கால் நடுக்கத்தைப் போக்கும். பல் வலியைப்போக்கி, உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். வாத, பித்த, கபம் என்னும் மூன்றையும் சீராக வைத்திருக்க, பீன்ஸ் சிறந்த மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. நீண்ட நாள் ஆறாத புண்களின் மீது, பீன்ஸ் வேகவைத்த நீரை ஆறவைத்து புண்களைக் கழுவி வந்தால், விரைவில் ஆறும்.
பீன்ஸ், ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, ரத்தத் தை சுத்தமாக்குகிறது. ரத்தக் குழாய் அடைப்புகளை போக்குகிறது. உயர் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. இருதய அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

2 responses

  1. விதைகளா

  2. அய்யா பீன்ஸ் என்றால் பச்சை பீன்ஸா அல்லது விதிகளா ?? தயவுசெய்து போட்டோ போடவும் . நன்றி

%d bloggers like this: