Advertisements

ஏன்? எதற்கு? எதில்? – நியாசின்

நியாசின் (Niacin)… `வைட்டமின் பி 3 காம்ப்ளெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரில் கரையும் வைட்டமின்களில் மிக முக்கியமானது. இதை `நிகோட்டினிக் அமிலம்’ (Nicotinic Acid) என்றும் சொல்வார்கள். இந்த வைட்டமின் இதயத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் இந்த வைட்டமின் குறைபாட்டால் `பெல்லாக்ரா’ (Pellagra) எனும் தோல் நோய் ஏற்பட வாய்ப்பும்

உள்ளது.வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் மத்தியில் சுகாதாரமற்ற சூழ்நிலை, உயிர்ச்சத்துப் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக இந்தத் தோல் நோய் ஏற்படுகிறது. நல்ல சுகாதாரச் சூழலில் வாழ்வது, ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை உண்பதன் மூலம் இந்த நோயை எளிதாகக் குணப்படுத்தலாம்.

உணவைச் சமைக்கும்போது நிகோட்டினிக் அமிலம் அழிவதில்லை. ஆனால், நீரில் கரையும் தன்மை உள்ளதால் அதிகளவு நீரில் சமைத்து அந்த நீரை வெளியேற்றும்போது இது வீணாகிறது. நமது வயிற்றால் உறிஞ்சப்பட்டு, சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. திசுக்களின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை?

* ஆண்களுக்கு 18-21 மில்லிகிராம்.

பெண்களுக்கு 17 மில்லிகிராம்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 20 மில்லிகிராம்.

குழந்தைகளுக்கு (0-12 வயது) 7 மில்லிகிராம்.

எதில் நியாசின்?

அரிசி, கம்பு, சோளம், அரிசித் தவிடு.

முட்டை, இறைச்சி, மீன், கோழிக்கறி, ஈரல்.

வேர்க்கடலை.

மஷ்ரூம்.

பச்சைப் பட்டாணி, சூரியகாந்தி விதை.

அவகேடோ பழம்.

நியாசின் குறைபாட்டால் வரும் நோய்கள்

3டி நோய் – தோல் நோய் (Dermatitis), பேதி (Diarrhea), ஞாபக மறதி (Dementia).

`பெல்லாக்ரா’ என்னும் தோல் நோய். இது  ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் வரும்.

வாந்தி, பேதி, தொண்டைப்புண், வாய்ப்புண்,குழப்பம், மறதி போன்ற அறிகுறிகள் தென்படும்.

நோய் அறிகுறிகளைப் பார்த்தவுடன் சிகிச்சையளித்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில்தான் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் இது வயிற்றுப்புண்ணையும் உண்டாக்கிவிடும். அதனால் முடிந்த வரை ஆரோக்கியமான உணவின் மூலம் நியாசினை எடுத்துக்கொள்வதுதான் நல்லது.

Advertisements
%d bloggers like this: