அ.தி.மு.க., இரு அணியினரின் இணைப்பு தோல்வி… ஏன்?’முதல்வர் பதவி எனக்கே’ என பழனிசாமி பிடிவாதம்

முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன்; பொதுச் செயலர் பதவியும் எனக்கே வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால், அ.தி.மு.க., இரு அணிகளின் இணைப்பு பேச்சு, தோல்வியில் முடிந்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போடுவதால், உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. ‘அ.தி.மு.க.,வில்,

இரு அணிகளும் இணைந்தால் தான், இரட்டை இலை சின்னம் கிடைக்கும்; தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே, இரு அணிகளும் இணைய வேண்டும்’ என, முதல்வர் பழனிசாமியிடம், அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.’சசிகலா குடும்பத்தை ஒதுக்கி, இரு அணிகளும், விரைவில் இணைய வேண்டும்’ என, பா.ஜ., டில்லி மேலிடமும் உத்தரவிட்டு உள்ளது.பன்னீருக்கு பதவிஅதனடிப்படையில், மத்திய அரசின் உயர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் தலைமையில், இரு அணிகளின் இணைப்பு பேச்சு, டில்லியில் துவங்கியது. ‘முதல்வர் பதவியை பன்னீர் செல்வத்திற்கு விட்டுத் தர வேண்டும்’ என, அவரது அணி சார்பில், நிபந்தனை விதிக்கப்பட்டது; இதற்கு, முதல்வர் பழனிசாமி உடன்படவில்லை.’முதல்வர் பதவி, பொதுச் செயலர் பதவி இரண்டும், என்னிடம் தான் இருக்கும்; கட்சி பொருளாளர் மற்றும் நிதியமைச்சர் பதவியை, பன்னீர்செல்வத்திற்கு தருகிறோம். பாண்டியராஜனுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி தரப்படும்’ என, முதல்வர் பழனிசாமி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.’சசிகலா, அவரது குடும்ப உறுப்பினர்களை, கட்சி விஷயத்தில் தலையிடமால் பார்த்துக் கொள்கிறேன். ஆக., 5ல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொதுக்குழுவைக் கூட்டி, பொதுச் செயலரை முறையாக தேர்வு செய்யலாம்’ என, முதல்வர் பழனிசாமி தரப்பில் தெரிவித்த கருத்தை, பன்னீர்செல்வம் அணி ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவே, டில்லியில் நடந்த இணைப்பு பேச்சு, தோல்விக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது.ஏமாற்றுகிறார்இது ஒரு பக்கம் இருக்க, ‘முதல்வர் பழனிசாமி அணியினர், இரட்டை வேடம் போடுவதால், அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பு இல்லை’ என, பிரதமரிடம், பன்னீர் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.’சசிகலா குடும்பத்தை, கட்சியை விட்டு விலக்க வேண்டும்.
ஜெ., மறைவு குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோர வேண்டும்’ என, பன்னீர் அணி தரப்பில், துவக்கத்திலிருந்தே, நிபந்தனை விதிக்கப்பட்டு வருகிறது. இதை, பழனிசாமி அணியினர் ஏற்கவில்லை. இதனால், இணைப்பு பேச்சு துவங்காமல், குழுக்கள் கலைக்கப்பட்டன.இருப்பினும், ‘இணைப்பு பேச்சு நடந்து வருகிறது’ என, கூறியபடி, பன்னீர் அணியை வலுவிழக்க செய்யும் பணியில், முதல்வர் பழனிசாமி அணியினர் ஈடுபட்டனர். இதை, பன்னீர் அணியினர் தாமதமாக உணர்ந்தனர்.
அதற்குள், அவர்கள் அணியில் இருந்த, ஆறுக்குட்டி, எம்.எல்.ஏ.,வை பழனிசாமி தரப்பினர் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டனர். இது, பன்னீர் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சமீபத்தில், பிரதமர் மோடியை பன்னீர் அணியினர், டில்லியிலும், மதுரையிலும் சந்தித்துப் பேசினர். அப்போது, இரு அணியினரும் இணைந்து செயல்படும்படி, பிரதமர் அறிவுரை வழங்கி உள்ளார். அதை ஏற்க மறுத்த பன்னீர் அணியினர், முதல்வர் அணி மீது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.’பொறுத்திருங்கள்”முதல்வர் பழனிசாமி அணியினர், சசிகலா குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்.
முதல்வர், பொதுச் செயலர் என, அதிகாரமிக்க பதவி எதையும் விட்டுத் தர மாட்டோம் என்கின்றனர். சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமியின் கீழ் இணைந்தால், கட்சி தொண்டர்கள், மக்கள் ஏற்க மாட்டார்கள். ‘எனவே, முதல்வர் பதவி மற்றும் பொதுச் செயலர் பதவியை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, இணைப்பு சாத்தியம். இல்லையேல், தனித்து செயல்படவே விரும்புகிறோம்’ என, கூறியுள்ளனர்.மேலும், ‘பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது.
அமைச்சர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள நிலையில், அவர்களுடன் இணைந்தால், எங்களுக்குத் தான் கெட்டப் பெயர் ஏற்படும். ‘அவர்கள், பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று செயல்பட முன்வந்தால் மட்டுமே, இணைப்பு சாத்தியம்’ என்றும், பிரதமரிடம் கூறி உள்ளனர்.அதை கேட்ட பிரதமர், ‘சற்று பொறுத்திருங்கள்’ என, கூறியுள்ளார். இதனால், உற்சாகமாகி உள்ள பன்னீர் அணியினர், தனித்து செயல்பட முடிவு செய்துள்ளனர். அதன் எதிரொலியாகவே, எம்.பி., மைத்ரேயன், ‘கறந்த பால் மடி புகாது; கருவாடு மீன் ஆகாது; இணைப்பு சாத்தியமில்லை’ என, திட்டவட்டமாக கூறி உள்ளார்.ஊழல் விவகாரத்தை, பிரதமரிடம் பன்னீர் தரப்பினர், ‘போட்டு’க் கொடுத்துள்ளதால், சோதனைகள் வருமோ என, அமைச்சர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

%d bloggers like this: