2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது.. டிடிவி தினகரன் அதிரடி பேட்டி !!

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருவதாகவும், அதுவே தங்களது தலையாய பணி என்றும், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் டிடிவி தினகரனை இன்று, அதிமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வர் ராஜா, ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள்.தனியரசு, தஞ்சை ரெங்கசாமி, மரியம் கென்னடி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது மாமியார் இறந்துபோனது குறித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த  டிடிவி தினகரன், அனைவரும் ஒருங்கிணைந்து கழகத்தை பலப்படுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும், 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகம் தயாராகி வருவதாகவும், அதுவே தங்களது தலையாய பணி என்றும் தெரிவித்தார். 
இதேபோல், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திவாகரன், கழகத்தில் எந்தப் பிளவும் இல்லை என்றும், யாரும் எங்கும் செல்லவில்லை என்றும் கூறினார்.

%d bloggers like this: