டாஸ்மாக் கடைகளுக்கு டாட்டா? எடப்பாடி பழனிசாமியின் ‘எம்.ஜி.ஆர் பாணி’
சுதந்திர தினத்துக்குள்ளாக தமிழகத்தில் மேலும் கணிசமாக டாஸ்மாக் கடைகளை மூட அரசு யோசனை செய்துவருவதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. சுதந்திர தினத்தன்று இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் அவர்கள்.
தண்டுக் கீரை
தண்டுக் கீரை:
- தண்டுக் கீரையுடன் உளுந்து , மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புக் கோளாறுகள் சரியாகும்.
பிளாஸ்டிக் அரிசியா, போலி அரிசியா? – அறிவியல் சொல்லும் ஆதாரம்!
கடந்த சில மாதங்களாகச் சமூக வலைதளங்களில் அதிகளவு அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளிகள்… பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை ஆகியவை குறித்து வந்தவைதான். அவற்றை வைத்து பரப்பப்பட்ட ‘மீம்ஸ்’களும் பட்டையைக் கிளப்பின. ‘பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை உண்மையிலேயே இருக்கின்றனவா? அவற்றைத் தயாரித்துக் கலப்படம் செய்ய முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்காமல், அந்தக் காணொளிகளைக் கண்டதுமே கலவரப்பட்டவர்கள் நிறைய பேர்.
கூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை!
விபத்து முதல் இதயநோய் பாதிப்புகள் வரை பல நோய்களுக்குச் சிகிச்சைக்கு முன்பு உயிரிழப்பு ஏற்படாமல் காக்க சி.பி.ஆர் (CardioPulmonary Resuscitation -CPR) என்னும் முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், தலைமுடிப் பிரச்னைகளுக்குத் தீர்வாகும் சி.பி.ஆர் முறை பற்றி உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள்… அது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.
C – செராமைடு
வடக்கு திசையில் ஏன் தலைவைத்துப் படுக்கக் கூடாது?
வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாகச் சொல்லப்படுகிறது. குரு உபதேசம் பெறுவதற்கும் வடக்கு திசையே உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால்தான் தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி அமைந்திருக்க, வடக்கு நோக்கி அமர்ந்தபடி சனகாதி முனிவர்கள் உபதேசம் பெறுகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு மிகவும் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. பரம்பொருளான ஈசன் உறையும் திருக்கயிலாயம் வடக்கு புறமாகத்தான் அமைந்திருக்கிறது. இவை போன்ற காரணங்களால் வடக்கு திசை என்பது வழிபாட்டுக்கு உரிய திசையாக நம் முன்னோர்களால் சொல்லப் பட்டிருக்கிறது.
பிள்ளை வரம் தரும் வளையல் பிரசாதம்!
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆடிப் பூரம் விழாவின் 4-ம் நாளன்று, அம்பாளுக்கு வளைகாப்பு நடைபெறும். இந்த வைபவத்தின்போது, ஊறவைத்த பயறு வகைகளை, அம்பாளின் மடியில் கட்டிவைத்து அலங்காரம் செய்வர். பார்ப்பதற்குக் கர்ப்பிணி போலவே காட்சி தருவாள் காந்திமதி அம்மன். விழாவுக்கு வந்தவர்களுக்கு வளையல் பிரசாதம் தரப்படும். இந்த வளையலை அணியும் புதுமணப் பெண்ணுக்கு அடுத்த பூரத்துக்குள் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், இந்த வைபவத்தைக் காணும் கன்னிகளுக்கு விரைவில் திருமணம் கைகூடுமாம்!