கூந்தல் காக்கும் சி.பி.ஆர் சிகிச்சை!

விபத்து முதல் இதயநோய் பாதிப்புகள் வரை பல நோய்களுக்குச் சிகிச்சைக்கு முன்பு உயிரிழப்பு ஏற்படாமல் காக்க சி.பி.ஆர் (CardioPulmonary Resuscitation -CPR) என்னும் முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், தலைமுடிப் பிரச்னைகளுக்குத் தீர்வாகும் சி.பி.ஆர் முறை பற்றி உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள்… அது பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

C – செராமைடு

எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும். ஆங்கிலத்தில் சி பார் செராமைடு (Ceramaides) எனலாம். இது ஒரு வகை கொழுப்புத்திசு. கூந்தலின் வேர் வரை சென்று உள்ளிருந்து ஊட்டமளிக்கும். மேலும், முடிக்கு எண்ணெய்ப் பசையுடன் போஷாக்கு அளித்து, பளபளப்பாகவும் வலிமையாகவும் இருக்க உதவுகிறது.

கோதுமை விதை எண்ணெய், திராட்சை விதை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சணல் விதை எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களில் செராமைடு நிறைவாக உள்ளது.

P – புரோட்டீன்

முடியின் வலிமைக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து புரோட்டீன். இது தலைமுடி உடைந்து போவது,  உதிர்வு  போன்ற பிரச்னைகளைத் தடுப்பதுடன் முடியையும் வலிமையாக்குகிறது. தவிர, முடி வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம்  முடியின்  ஈரப்பதத்தையும் அதிகரிக்கிறது.

முட்டை, யோகர்ட், பருப்பு, பயறு வகைகள், இறைச்சி போன்றவற்றில் புரோட்டீன் நிறைவாக உள்ளது.

R – ரெஸ்ட் மற்றும் ரிலாக்ஸ்

இன்றைய வாழ்க்கை முறையில் இளம் தலைமுறையினருக்கும் நரைமுடி ஏற்பட டென்ஷன், மனஅழுத்தம் ஆகியவை முக்கியக் காரணங்களாகின்றன. எனவே, எப்போதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டும். மனதை ரிலாக்ஸ் செய்யும் டெக்னிக்குகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அதைப் பின்பற்றுங்கள்.

%d bloggers like this: