கல்லீரல் காக்க உடற்பயிற்சியும் அவசியம்!

ம் உடலின் உள்ளுறுப்புகளில் மிகப்பெரியது கல்லீரல். இது 500-க்கும் மேற்பட்ட வேலைகளைப் பிரமாதமாகச் செய்கிறது. செரிமானத்துக்குத் தேவையான உயிர்வேதியியல் பொருள்களை உற்பத்தி செய்வதுகூட கல்லீரல்தான். அப்படிப்பட்ட கல்லீரல் ஆரோக்கியமாகச் செயல்பட வேண்டுமானால் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளும்  உடற்பயிற்சியும் அத்தியாவசியத் தேவை.

செய்யவேண்டியவை


* உடலுக்குத் தேவையான அத்தனை சத்துகளும் உள்ள சரிவிகித உணவையே சாப்பிட வேண்டும்.
* நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கல்லீரலுக்கு நல்லது.
* ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த, சத்தான உணவுகளையே உண்ண வேண்டும்.
* நிறைய தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
* எடை குறைக்க விரும்பினால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அதை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவு, தொடர்ந்த உடற்பயிற்சி இவை கல்லீரலைக் காக்கும். 
* உங்கள் பிஎம்ஐ (Body Mass Index) அளவு இயல்பான நிலையில் (18-25) இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை
* நம் உணவு கொழுப்பு நிறைந்ததாகவோ, சர்க்கரையோ உப்போ அதிகமானதாக இல்லாதபடியோ பார்த்துக்கொள்ள வேண்டும்.
* வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

%d bloggers like this: