Daily Archives: ஓகஸ்ட் 3rd, 2017

புதிய பென்ஷன் திட்டம்… மூத்த குடிமக்களுக்கு பயன் தருமா?

மூத்த குடிமகன்களுக்கு, அடுத்த பத்து வருடங்களுக்கு  ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் தரக்கூடிய ஒரு திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த வாரம் தொடங்கி வைத்தார். பிரதான் மந்த்ரி வய வந்தனா யோஜனா (PMVVY) என இந்தத் திட்டத்துக்குப் புதிய பெயர் வைக்கப்பட்டு இருந்தாலும், வரிஷ்ட  பென்ஷன் பீமா யோஜனா 2017 திட்டத்தின் காப்பிதான் இது. 

இந்தத் திட்டத்தில் 2018 மே 3-ம் தேதி வரை மட்டுமே சேர முடியும். அதற்கு மேல் சேர முடியாது  என்பதால், மூத்த குடிமக்களில் சிலர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று பரபரப்பாகச் செயல்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேருவதினால் நன்மையா என்று பார்ப்போம்.

Continue reading →

பழைய தங்க நகைக்கு ஜி.எஸ்.டி வரி உண்டா?

ரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக, தங்கம் விஷயத்தில், ‘புதிய நகை வாங்கும்போது மட்டுமல்ல, பழைய நகையை விற்பவர்களும் ஜி.எஸ்.டி  வரியைக் கட்ட வேண்டும்’ என்று தகவல் பரவ, இந்தச் சூழலில் அவசரத்துக்கு நகையை விற்றால் ஏமாற்றப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தில் செய்வதறியாமல் திகைத்தார்கள் பலர். இப்போது அவசரத் தேவைக்காகக்கூட பழைய நகையை விற்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் பெண்கள்.

Continue reading →

எக்கோ ஃப்ரெண்ட்லி ஏப்ரன் – டெக்னீஷியன்களைக் காக்கும் டெக்னாலஜி

றிவியல் வளர்ச்சியில் உள்ளுறுப்பு களின் செயல்பாடுகளைக் கண்டறிய எக்ஸ்-ரே, ஸ்கேன், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பல தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆஞ்சியோகிராம்  உள்ளிட்ட சில சோதனைகளில் உடல் பாகங்களைப் பரிசோதிக்கும்போது அதிகளவில் கதிர்வீச்சு செலுத்தப்படுவதால் டாக்டர்கள், டெக்னீஷியன்கள், நோயாளிகளின் உடன் வருபவர்கள் என அனைவரும் கதிர்வீச்சால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மருத்துவமனைகளில் அவர்கள் காரீய ஏப்ரன் அணிவது கட்டாயம்.  5 கிலோ எடை, மறுசுழற்சி செய்யவோ, மடித்து வைக்கவோ முடியாதது போன்ற காரணங்களால் இந்த ஏப்ரனைப் பயன்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள்  நிறைய இருக்கின்றன. 

Continue reading →

சகல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்

ருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று.

பாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம்.

இந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.

எப்படிப் பாடுவது, எப்படி வழிபடுவது?

அனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.

தினமும் காலையில் எழுந்து நீராடி, சமயச் சின்னங்கள் தரித்து, பூஜையறையில் முருகப்பெருமான் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு வண்ண மலர்களை பயன்படுத்துவது விசேஷம் என்றாலும், அவை கிடைக்காதபட்சத்தில் மற்ற வாசனை மலர்களையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். முருகனின் மகிமையைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் சொல்லி பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். பாடல் முடிந்ததும் நிறைவாக நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து, தூப-தீபம் காட்டி ஆராதித்து வணங்க வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள், இன்னும் பிற தோஷங்களால் வருந்துவோர், அனுதினமும் குமாரஸ்தவத்தைப் பாராயணம் செய்து குமரன் அருளால் வாழ்வும் வரமும் பெற்று மகிழுங்கள்.

இங்கே, நீங்கள் அர்ச்சித்து வழிபடுவதற்கு வசதியாக முழுப் பாடலும் முதலில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து… பாடல் வரிகளின் விளக்கத்தை, மகிமையை நீங்கள் அறிந்து உணர்ந்து வழிபடும் விதம் ஒவ்வொரு வரியும் உரிய விளக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.

Continue reading →