புதுக்கட்சி துவக்குகிறார் ரஜினி டில்லியில் சட்ட விதிகள் தயார்

நடிகர் ரஜினி துவக்கவுள்ள புதுக்கட்சியின் சட்டவிதிகள், கொள்கை, கோட்பாடுகளை தயாரிக்கும் பணி, பா.ஜ., மேலிட ஆலோசனை படி, டில்லியில் துவக்கப்பட்டு உள்ளது.

வரும், 22ல், சென்னை வரும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, முக்கிய ஆலோசனை நடத்த, ரஜினியும் திட்டமிட்டுள்ளார்.

அரசியல் பிரவேசம்சில மாதங்களுக்கு முன், ரசிகர்கள் சந்திப்பை நடத்திய ரஜினி, ‘தமிழகத் தில் சிஸ்டம் கெட்டுவிட்டது; சிஸ்டத்தை மாற் றினால் தான் தமிழகம் உருப்படும். போருக்கு தயாராகுங்கள்’ என, தன் ரசிகர்களிடம் தெரி வித்தார். அரசியல் பிரவேசம் குறித்த, அவரது இந்த சூசக அறிவிப்பு, பரபரப்பை ஏற்படுத்தியது.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

மத்தி யில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. திரையு லகைச் சேர்ந்த நடிகர், நடிகையரும் ரஜினியின் அரசியலுக்கு வருவதை ஆதரித்து அறிக்கையும், பேட்டியும் அளித்து வருகின்றனர். பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும், ‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்’ என, அழைப்பு விடுத்தார். ரஜினி, தான் நடிக்கும், காலா,2.0 ஆகிய திரைப்படங்களின் பணிகள் முடிந்த பின், தீவிர அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

கலந்துரையாடல்

அதற்கேற்ற வகையில், அரசியல் பார்வையாளர் கள், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தமிழ் அமைப்பு களின் தலைவர்கள், பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு நிர்வாகிகளை எல்லாம் அழைத்து, அரசியல் நிலவரம் குறித்து, ரஜினி ஆர்வமாக கலந்துரையாடி வருகிறார். ஆக., 15ல் தான், ரஜினி நடித்த முதல் திரைப்படமான, அபூர்வராகங்கள் வெளி வந்தது. அதனால், வரும், 15ல் அவரது அரசி யல் பிரவேசத்தை அறிவிப்பார் என, ரசிர்கள் மத்தி யில் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், காலா படப்படிப்பு இன்னும்முடிவடைய வில்லை. மேலும், ரஜினியின் ஜாதகப்படி, செப்டம்ப ரில் நடக்கும், குருப்பெயர்ச்சிக்கு பின், அவருக்கு நேரம் நன்றாக இருக்கிறது என, ஜோதிடர்கள் கணித் துள்ளனர்.இதனிடையே, டில்லி பா.ஜ., மேலிடத்தின் ஆலோசனைப்படி, வழக்கறிஞர்கள் குழு ஒன்று, ரஜினியின் புதுக்கட்சிக்கான சட்ட விதிகள், தமிழக நலன், தேசிய நலன் சார்ந்த கொள்கை கள், கோட்பாடுகளை சத்த மில்லாமல் உருவாக்கி வருகிறது.
இந்த பணிகள் முடிந்த பின், தேர்தல் கமிஷ னிடம், புதுக்கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களையும் ரஜினிக்கு தயார் செய்து கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, 22ல், தமி ழகம் வருகிறார். தொடர்ந்து, மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சென்னை யில், அமித் ஷா தங்கியிருக்கும் போது, அவரை ரஜினி நேரில் சந்தித்து, புதுக்கட்சி துவக்குவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும், பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

%d bloggers like this: