Daily Archives: ஓகஸ்ட் 7th, 2017

எடப்பாடி பழனிசாமிக்கும் திவாகரனுக்கும் கடுகடு மோதல்! – பரபர பின்னணி

தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் திவாகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், திவாகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

Continue reading →

மனமே மனமே இறகு போடு -காமராஜ்

Pages from Kamaraj_Page_1Pages from Kamaraj_Page_3

CLICK HERE TO DOWNLOAD PDF FILE

கிளம்பும் புது வம்பு…டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்!

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்’ – ‘எந்தப் பொருளினால் எல்லாம் இன்பம் உண்டோ, அதே பொருளால் துன்பமும் உண்டு’ என்பதே இந்தத் திருக்குறளின் அடிநாதம்.
டிஜிட்டல் மயமாகும் உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, நாமும் டிஜிட்டல் மயமாகிவருகிறோம். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் என நம் அன்றாட வாழ்க்கையை பல்வேறு விதங்களில் எளிதாக்க நன்மை செய்யும் இந்த டிஜிட்டல் மாற்றம், பக்கவிளைவாக நாம் கேட்காமலேயே சில சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ். தொழில்நுட்பம் தரும் உடல்ரீதியான தொல்லைகள் பற்றி இதற்கு முன்பு நாம் பல கட்டுரைகளில் விவாதித்திருக்கிறோம். கிணறு வெட்ட பூதம்

Continue reading →

உடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கரும்புசாறின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.கோடைகாலத்தில்

Continue reading →

உங்கள் கையில் தான் எல்லாம்!

குழந்தைகளின் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு, குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. ஒரு
குழந்தைக்கு, நல்ல பெற்றோராக இருப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால், எளிதாக இருக்க, சில வழிகளை கையாள வேண்டும்.

Continue reading →

தேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது? பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்பு

அ.தி.மு.க., பன்னீர் அணியினரும், முதல்வர் பழனிசாமி அணியினரும், தேர்தல் கமிஷனின் முடிவு எப்போது வரும் என, ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலரை, கட்சி தொண்டர்கள் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா, பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

Continue reading →

சர்ப்ப தோஷம் போக்கும் காளஹஸ்தீஸ்வரர்

ன்மிகத்தின் அடித்தளமே   நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் நாம் எத்தனை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாலும், அதனால் ஒரு பலனும் கிடைக்காது என்பது தான் உண்மை.
நம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு, உரிய தீர்வு தரும் பரிகாரக் கோயிலாகத் திகழ்கிறது. ஆனால், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத முற்காலத்தில், வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத மக்கள், அத்தகைய கோயில்களுக்கு நேரில் சென்று வழிபடுவதற்கு நிறைய சிரமங்கள் இருந்தன. இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே கோயில்கள் ஏற்படுத்தி, பிரசித்தி பெற்ற தலங்களில் அருளும் இறைவனின் பெயரில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட வகை செய்தனர் மன்னர் பெருமக்கள்.

அத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் இதோ இப்போது நாம், ‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக தரிசித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை  சமேத காளஹத்தீஸ்வரர் திருக்கோயில்.
திருவாரூர் மாவட்டம் செம்பியவேளூர் எனும் தலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் காசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரான தலமாகப் போற்றப் படுகிறது. காளஹஸ்தியில் அருளும் காளத்திநாதரே இந்தத் தலத்தில் காளஹஸ்தீஸ்வரராக அருள்புரிகின்றார். அதேபோல், காசியின் கங்கைக் கரையில் `அரிச்சந்திரா காட்’ இருக்கிறதென்றால், செம்பியவேளூர் அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.
ஒருகாலத்தில் பிரசித்திப் பெற்றுத் திகழ்ந்த ஐயனின் திருக்கோயில் தற்போது  சிதிலம் அடைந்து கிடக்கும் நிலையைப் பார்த்தபோது, ‘வினைப் பயன் அகற்றி விதிநலம் சேர்க்கும் ஐயனின் திருக்கோயிலுக்கா இந்த நிலை?’ என்று நெஞ்சம் பதறித் துடித்தது.  அதேநேரம் தற்போது ஆலயத்துக்கான திருப்பணிகள் மேற்கொண்டிருப் பதைக் கண்டபோது நமக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டது. திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அன்பர் முருகானந்தத்தைச் சந்தித்தோம்.

‘`இந்தக் கோயிலுக்குப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய குறிப்புகள் தஞ்சை பெரியகோயில் மற்றும் திருத்துறைப்பூண்டி கோயிலில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பிரசித்திப் பெற்றிருந்த இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பிறகு 1945-ம் வருடம் நிலக்கிழார் அழகுசாமி முதலியார் குடும்பத்தினர் சின்ன அளவில் கோயில் கட்டி பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.

பல வருடங்களுக்குப் பிறகு சரியான பராமரிப்பு இல்லாமல் போனதுடன், ஓர் அரசமரம் வளர்ந்து கருவறை முழுவதும் சிதிலமடைந்துவிட்டது. போன வருடம் கும்பகோணம் `ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்’ திருவடிக்குடில் சுவாமிகள் அடியார்களுடன் வந்து கோயிலைப் பார்வையிட்டு, உழவாரப் பணிகள் செய்ததுடன், அவர்களுடைய தொடர்ந்த முயற்சியால் கடந்த நவம்பர் மாதம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதற்காக கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட்டும் தொடங்கி இருக்கிறோம்.  விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம்’’ என்றார்.
திருப்பணிகளுக்குத் தூண்டுதலாக இருந்த திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்துக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.

‘‘சர்ப்ப தோஷம் இருப்பவர்கள்,  காளஹஸ்திக்குச் சென்று வழிபட்டால்  தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமைவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும், அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் உள்ள பைரவரும் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். அஷ்டமி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டால், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களும், பூமி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விலகிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.
காசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரானதாகப் போற்றப்பெறும் செம்பியவேளூர் காளஹஸ்தீஸ் வரர் கோயிலின் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். பொலிவுற எழும்பும் ஆலயத்தில் எழுந்தருளி, நித்திய பூஜைகளை ஏற்று நமக்கு நல்வாழ்வும் வரமும் அருள காத்திருக்கிறார் காளஹஸ்தீஸ்வரர்.
அவரின் பேரருளால் உலகம் உய்வடையும் பொருட்டு, திருக்கோயில் திருப்பணிகள் தொய்வின்றி நடைபெற நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.
நிதியோ, உடலுழைப்போ, பொருளோ… நமது அந்தச் சமர்ப்பணம், ‘விண்ணினார் பணி வீரனும், திருமுடியில் வெண்மதியை மாலையாக அணிந்தவனும், காளத்தியில் உறை’பவனுமாகிய ஐயனின் பேரருள் பெருங்கருணைத் திறம் நம்மையும் நம் சந்ததியரையும் வாழ்வாங்கு வாழ்விக்கச் செய்யும் என்பது உறுதி.  


வங்கிக் கணக்கு விவரம்:
The kumbakonam  Central Co-operative Bank,
Thiruthuraipoondi Branch,
A/c NO: 708037266, IFSC NO: TNSC 0010400
தொடர்புக்கு: திரு.பிரகதீசன் – 99407 84719
         திரு.முருகானந்தம் – 9786156465