Advertisements

தேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது? பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்பு

அ.தி.மு.க., பன்னீர் அணியினரும், முதல்வர் பழனிசாமி அணியினரும், தேர்தல் கமிஷனின் முடிவு எப்போது வரும் என, ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

அ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலரை, கட்சி தொண்டர்கள் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா, பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

எனவே, அவர் தேர்வு செல்லாது என, அறிவிக்க கோரி, பன்னீர் அணியினர், தேர்தல் கமிஷனி டம் மனு கொடுத்தனர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, இரட்டை இலை சின்னத்தை, தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என, இரு அணிகளும், தேர்தல் கமி ஷனில் மனு கொடுத்தன.உடனடியாக முடிவு எடுக்க முடியாததால், தேர்தல் கமிஷன் சின்ன த்தை முடக்கியது.
இரு அணிகளுக்கும், வேறு சின்னங்கள் ஒதுக் கப்பட்டன. பின் இரு அணியி னரும், கட்சியில் தங்களுக்குதான் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்க, லட்சக்கணக்கான தொண்டர்களிடம், பிரமாணவாக்கு மூலம் பெற்று,தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தனர். பொதுச்செயலர்

நியமனம், இரட்டை இலை சின்னம் முடக்கம் ஆகிய இரண்டிலும், தேர்தல் கமிஷன் இதுவரை தீர்ப்பு கூறாமல் உள்ளது.
இந்நிலையில், சசிகலா அணியில், முதல்வர் பழனிசாமி அணி, தினகரன் அணி என, பிளவு ஏற்பட்டு உள்ளது. முதல்வர் பழனிசாமி அணியினர், சசிகலா குடும் பத்தை கட்சியில் இருந்து முழுமை யாக ஒதுக்கி விட்டு, கட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது; பன்னீர் அணியை இணைக்க முயற்சிப்பது, அவர்கள் வர மறுத்தால், அங்குள்ள நிர்வாகிகளை இழுப்பது என முடிவு செய்து, அதற்கேற்ப காய்களை நகர்த்தினர்.
அதன் பலனாக, பன்னீர் அணி, எம்.எல்.ஏ., ஆறுக் குட்டி, முதல்வர் அணிக்கு தாவி உள்ளார். அதே போல், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த, எம்.எல். ஏ.,க்களை இழுக்க துவங்கி உள்ளனர். கட்சியும், ஆட்சியும் பறிபோவதை உணர்ந்த, சசிகலா குடும்பத்தினர், தங்களுக்குள் உள்ள வேறுபாடு களை மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட முடிவு செய்துள்ளனர். தினகரன் அதிரடியாக, தன் ஆதர வாளர்களை, புதிய நிர்வாகிகளாக நியமித்ததுடன், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
மீண்டும் சசிகலா குடும்பத்தினரிடம், கட்சி சென் றால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். இதை தடுக்க, தேர்தல் கமிஷன் முடிவை, முதல்வர் பழனிசாமி அணியினர் எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க.,பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என, தேர்தல் கமிஷன் அறிவித்தால், அவரால் துணை பொதுச்செயலராக தினகரன் நியமிக்கப்பட் டதும் செல்லாததாகி விடும்.திவாகரன் கட்சி யில் இல்லை. எனவே, சசிகலா குடும்பத்தை முற்றிலும் ஒதுக்கி விடலாம். ஆட்சி அதிகா ரத்தை பயன் படுத்தி, கட்சியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம் என, முதல்வரும், அவரது ஆதரவு அமைச்சர்களும் நம்புகின்ற னர். எனவே, அவர்கள் தேர்தல் கமிஷன் முடிவை எதிர்பார்க்கின்றனர்.
அதே போல், பன்னீர் அணியினரும் தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர். சசிகலா நியமனம் செல்லாது என்றால், அவர், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சியில் இருந்து நீக்கியது செல்லாததாகி விடும்.
வேறு வழியின்றி, பழனி சாமி அணியினர், அவர்களுடன் இணைந்து செயல்பட முன் வருவர். அவர்கள் மறுத்தால், பொதுச்செயலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறலாம் என, நினைக்கின்றனர்.
இரு தரப்பின ரும், தேர்தல் கமிஷன் தீர்ப்பை எதிர்பார்க்க, சசிகலா குடும்பத்தினரும், அவர் களின் ஆதரவாளர்கள் மட்டும், தேர்தல் கமிஷன் தீர்ப்பு காலதாம தமாக வேண்டும் என, விரும்புகின்றனர். தேர்தல் கமிஷன் விரைவில் தீர்ப்பு வழங்கினால்,தமிழக அரசிய லில் மீண்டும் பரபரப்பு ஏற்படும்.-

Advertisements
%d bloggers like this: