ஏன்? எதற்கு? எதில்? – செலினியம்

சீனர்களால் 1979-ம் ஆண்டில் செலினியம் (Selenium) என்ற உயிர்ச்சத்தின் முக்கியத்துவம் கண்டறியப்பட்டது. சீனக் குழந்தைகளுக்கு செலினியம் ஊட்டச்சத்து மாத்திரை கொடுப்பதன்மூலம், கேஷன் (Keshan Disease) நோய் வருவது தவிர்க்கப்படுவதைக் கண்டறிந்தார்கள். இது ஒருவித இதய நோய். இதிலிருந்து செலினியத்தின் முக்கியத்துவம் அதிகமாகி, நாளடைவில் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகிவிட்டது.

ஒருநாளைக்கு எவ்வளவு செலினியம் தேவை?

ஆண், பெண் இருபாலருக்கும், அனைத்து வயதினருக்கும் 55 மைக்ரோகிராம் தேவை. அதிகளவு செலினியம் பக்கவிளைவை ஏற்படுத்தும். நகம் மற்றும் முடியின் நுனிகள் உடைந்துபோகும்.
எதில் செலினியம்?

* மீன், இறால், நண்டு, டுனா மீன்,  ஆட்டிறைச்சி, ஈரல், முட்டை, கோழிக்கறி (வான்கோழி).

* கோதுமைத்தவிடு, பிரெட்.

* பசலைக்கீரை, புரோக்கோலி, முட்டைகோஸ்.

* பிரேசில் நட்ஸ் (Brazil Nuts).

* சூரியகாந்தி விதை, எள், ஆளி விதை

* சியா விதைகள் (Chia Seeds).

* பூண்டு, லெமன் கிராஸ், கோதுமைப்புல், வெந்தயம்.

 

செலினியம் குறைவால் ஏற்படும் நோய்கள்

* மனஅழுத்தம் அதிகரிக்கும்.

* உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும்.

* தைராய்டு குறைவு (Hypothyroidism) உண்டாகும்.

* முன் கழுத்துக் கழலை (Goiter) ஏற்படலாம்.

* குழந்தைகளுக்கு `கிரெடினிஸம்’ (Cretinism) எனும் வளர்ச்சிக்குறைபாட்டு நோய் ஏற்படும்.

* அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும்.

செலினியத்தின் சிறப்புகள்

* நம் உடலில் செல் புரதத்தை உண்டாக்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

* நமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

* ரத்தத்தில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) எனும் தேவையற்ற நச்சை வெளியேற்றப் பயன்படுகிறது.

* தடுப்பூசி போடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுக்கிறது.

* புற்றுநோய்  ஆபத்துகளைக் குறைக்கிறது.

* தைராய்டு ஹார்மோன் சுரக்கப் பயன்படுகிறது.

* கருச்சிதைவைத் தவிர்க்கிறது. விந்தணுவுக்குச் சக்தி தருகிறது.

%d bloggers like this: