வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.. தமிழக அரசு தாராளம்

சென்னை: வீடுகளில் 12 மதுபான பாட்டில்களை இருப்பு வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம் தமிழக அரசிதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உள்நாட்டு

மதுபான வகைகள் தலா 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 6 பாட்டில்களிலும், வெளிநாட்டு மதுபான வகைகள் தலா 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 6 பாட்டில்களிலும் மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். மேலும், 12 பாட்டில்கள் பீர், 12 பாட்டில் ஒயின் வகைகளையும் வீட்டில் வைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தண்ணீர் சேமிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என உச்சநீதிமன்றம் இன்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியதை ஒப்பிட்டு, தமிழக அரசு இந்த ‘தண்ணியை’ வீட்டில் சேமிக்க அனுமதித்துள்ளதாக கேலி செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

%d bloggers like this: