Daily Archives: ஓகஸ்ட் 11th, 2017

டிடிவி தினகரனை நீக்க எடப்பாடி அதிரடியாக முடிவு எடுத்தது எப்படி? பரபர பின்னணி

சென்னை: அ.தி.மு.க அம்மா அணியில் இருந்து தினகரனுக்கு எதிராக வெளியான தீர்மானத்தை எதிர்பார்த்தே காத்திருந்தனர் மன்னார்குடி உறவுகள். தினகரனுக்கு வேண்டிய நிர்வாகிகளும் அவருக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டதை அதிர்ச்சியோடு கவனித்தார் தினகரன்.

Continue reading →

ரன் பேபி ரன்!

ஓட வேண்டும் என முடிவு செய்துவிட்டால் அதற்கு உதவ ஏராளமான ஆப்ஸ் இருக்கின்றன. அவற்றில், C25k ரொம்ப சிம்பிள் என்கிறார்கள் இதன் யூஸர்ஸ். எளிமையான பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து ஓட்டப்பயிற்சி செய்ய ஊக்கமளிக்கிறது இந்த ஆப். முதல் ஐந்து நிமிடங்கள் நடைப்பயிற்சி, அடுத்ததாக ஜாகிங், அதன்பின் ஓட்டம் என முறையாகப் பயிற்சி செய்ய, வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் இந்த ஆப், பயிற்சிகளை வழங்குகிறது. இயர்போனை

Continue reading →

செப்டிக் ஷாக் தெரியுமா?

இந்தியாவில் குழந்தைகளின் இறப்பு விகிதத்திற்குக் காரணமாக இருக்கும் நோய்களில் முதன்மையாக இருப்பது செப்டிக் ஷாக். பெப்சிஸ் என்பது ஒரு நோய்த்தொற்று. இந்த நோய்த்தொற்று மிகவும் ஆபத்தான பிரச்சனைகளை உருவாக்குவதோடு நச்சுத்தன்மையை பரப்பக்கூடிய கிருமிகளை கொண்டது. இதில் பாக்டீரியாவுக்கே அதிக பங்கு உண்டு. பொதுவாக பெப்சிஸ் என்றால் சீழ்பிடித்தல் என்று பொருள். ஆனால் சிலசமயங்களில் சீழ் பிடிக்காமல் கூட இந்த நோயானது நமக்கு தெரியாமலே உடலில் பரவிவிடும். இந்த நோயானது

Continue reading →

சாக்லேட் பவுடர் சாப்பிட்டால் கால்சியம் அளவு சீராகுமா?

கால்சியம் குறைபாடு… இன்றைய இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மிக முக்கியமான குறைபாடுகளுள் ஒன்று. இந்தச் சத்துக் குறைபாட்டால் இளைஞர்களில் சிலர் அதிக நேரம் சோர்வாகவே காணப்படுகிறார்கள்.

கால்சியம் குறைபாடு வருவது ஏன், அதைச் சரிகட்ட எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிட வேண்டும்? என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது பற்றிப் பார்ப்போம்.

Continue reading →

எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி!

ண்டு காய் காய்க்கும்… காணாமல் பூ பூக்கும்; அது என்ன?
இந்த விடுகதைக்கான விடை அத்தி என்பதுதான். அத்தி மரத்தில் பூ பூப்பது தெரியாதாம். ஆனால், திடீரென காய்கள் நிறையவே காய்த்திருக்கும். இதுதான் அத்தியின் சிறப்பு.
அத்திக்கு மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. துவர்ப்புச் சுவையுள்ள அத்தி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நரம்புகளைச் சிறப்பாக இயங்க வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்தி, காயாக இருக்கும்போது அதைப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, ரத்தச் சோகை, ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

இன்றைக்குப் பலருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கும் மலச்சிக்கலை

Continue reading →

கண்ணனைத் தரிசிக்க வெள்ளி சாளரங்கள்!

ந்திரன் சாப விமோசனம் பெறும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலமே உடுப்பி. `உடு’ என்றால் நட்சத்திரம்; `பா’ என்றால் தலைவர். நட்சத்திரங்களின் தலைவர் சந்திரன். `உடுபா’ என்று சந்திரனைக் குறிக்கும் சொல்லே உடுப்பி என மருவி அழைக்கப்படுகிறது.

* கடலில் புயலில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த கப்பலில் கிருஷ்ண விக்கிரகம் இருப்பதைத் தமது ஞானதிருஷ்டியால் கண்ட மத்வாசாரியார், விக்கிரகத்தை மீட்டு இங்கே பிரதிஷ்டை செய்திருக் கிறார். மத்வாசாரியரால் இயற்றப்பட்ட துவாதச பாசுரம் இன்றும் இந்த ஆலயத்தில் பகவானுக்கு சேவிக்கப் படுகிறது.
* மத்வாசாரியார், தம்மால் ஏற்படுத்தப்பட்ட எட்டு மடங்களின் பீடாதிபதிகள் உடுப்பி கிருஷ்ணரை பூஜிக்கும்படி ஒரு நியதியை ஏற்படுத்தினார். ஒவ் வொரு மடத்தின் பீடாதிபதியும் தனித்தோ அல்லது இளைய பீடாதிபதியுடன் சேர்ந்தோ பூஜை செய்வர். ஒவ்வொரு மடாதிபதியும் இரண்டு வருடங் களுக்கு ஒருமுறை மாறுவார்கள். இப்படி மாறும் வைபவம் `பரியாயம்’ என்று அழைக்கப்படுகிறது.
* எட்டு மடங்களின் பெயர்கள்: பேஜாவரா, புட்டிகே, பாலிமார், அதமார், சோதே, கன்னியூர், சிறூர் மற்றும் கிருஷ்ணபுரா.
* இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்  கிருஷ்ண விக்கிரகம், ருக்மணி பிராட்டியார் வழிபட்ட சாளக்கிராமத்தால் ஆனது.
* இந்தத் தலத்தின் தீர்த்த மண்டபத்தில் அருளும் கருடபகவான், அயோத்தியிலிருந்து வாதிராஜ தீர்த்தரால் கொண்டு வரப்பட்டவர் என்கிறார்கள்.
* இங்குள்ள மாதவ புஷ்கரணிக்கு வருடத்துக்கு ஒரு முறை புனித கங்கை வருவதாகக் கூறுகின்றனர்.
* ஒன்பது வெள்ளியினால் செய்த ஜன்னல்கள் மூலமே பகவான் கிருஷ்ணரை தரிசிக்க முடியும். உடுப்பி கிருஷ்ணரின் கருவறை – கிழக்குப் பக்கக் கதவு விஜய தசமியன்று மட்டுமே திறக்கப் படுகிறது.
* கிருஷ்ணரின் 24 வகையான நிலைகள் படங்களாக இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன.
* கனகதாசர் உடுப்பிக்கு வந்தபோது, அவருக்குக் கோயிலுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் மனமுருகி கிருஷ்ணரை வேண்டினார்.
* அவருக்கு அருள்புரிய விரும்பிய ஸ்ரீகிருஷ்ணர், கருவறையின் பின்புறம் துளையை உண்டாக்கி, அந்தத் துளையின் பக்கம் தான் திரும்பி புன்னகை யுடன் நின்று கனகதாசர் வழிபட்டு மகிழும்படி செய்தார். இந்தத்துளையே `கனகனகிண்டி’ என அழைக்கப்படுகிறது.
* உடுப்பியில் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படும் திருவிழாக்கள்: ரத ஸப்தமி, மாத்வ நவமி, ஹனுமத் ஜெயந்தி, ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி, நவராத்திரி மஹோத்சவம்,  மாத்வ ஜயந்தி (விஜய தசமி), நரக சதுர்த்தசி, தீபாவளி, கீதா ஜயந்தி.
* ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி தினத்தன்று ஆண்கள் புலி வேடம் அணிந்துகொண்டு ஊர் முழுவதும் நடமாடிக்கொண்டுவருவது மகிழ்வான நிகழ்வாகும்.
* இந்தத் தலத்தில் ரத யாத்திரையின்போது மூன்று தேர்கள் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த வைபவத்தின்போது பக்தர்கள் பசு தானம், துலாபாரக் காணிக்கை தந்து பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
* முப்பது வருடங்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையின்போது மூன்றாவது பரியாய சுவாமி களால் நடத்தப்பட்ட இந்து முஸ்லிம் சம்மேளன், தற்போதுள்ள ஐந்தாவது பரியாய ஸ்ரீவிஷ்வேச தீர்த்த சுவாமிகளால் நடத்தப்பட்டது.
* இந்த சம்மேளன், மக்கள் சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும், அமைதி யாக வாழவும் உடுப்பி   ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் நடத்தப்படுவதாகும்.