அமைதிக்கு ஐந்தே நிமிடங்கள்!

தியானம் (Meditation) செய்ய நேரமில்லை என்பவர்கள், ஒரு நாளில் ஐந்து நிமிடங்கள் மட்டும் ஒதுக்கினால் போதுமென்கிறது இந்த அப்ளிகேஷன். வேலையில் கவனம் செலுத்த, தூக்கமின்மையைப்

போக்க, மன அழுத்தத்தைக் குறைக்க என எந்தக் காரணத்துக்கும், ஐந்து முதல் இருபது நிமிடப் பயிற்சிகள் மூலம் இந்த ஆப் தீர்வளிக்கிறது. நடந்து செல்லும்போது, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கு ம்போது என எப்போது வேண்டுமானாலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்த முடியும். பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகளை எளிதாக வகைப்படுத்தியிருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
ப்ளே ஸ்டோர் : https://play.google.com/store/apps/details?id=com.simplehabit.simplehabitapp&hl=en

%d bloggers like this: