எடை குறைக்கும் இதயம் காக்கும் அத்தி!

ண்டு காய் காய்க்கும்… காணாமல் பூ பூக்கும்; அது என்ன?
இந்த விடுகதைக்கான விடை அத்தி என்பதுதான். அத்தி மரத்தில் பூ பூப்பது தெரியாதாம். ஆனால், திடீரென காய்கள் நிறையவே காய்த்திருக்கும். இதுதான் அத்தியின் சிறப்பு.
அத்திக்கு மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. துவர்ப்புச் சுவையுள்ள அத்தி, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். நரம்புகளைச் சிறப்பாக இயங்க வைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்தி, காயாக இருக்கும்போது அதைப் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். இரும்புச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தி, ரத்தச் சோகை, ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கலாம்.

இன்றைக்குப் பலருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கும் மலச்சிக்கலைச் சரிசெய்யக்கூடியது அத்திக்காய். இதை நான்கு துண்டுகளாக நறுக்கி, நடுவிலுள்ள விதைகளையும் பூச்சிகள் இருப்பின் அவற்றையும் அகற்றி விட்டு, துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிடலாம்.
சிலருக்கு உடல்சூடு அதிகமாக இருக்கும். இதற்கு அத்திக்காயைச் சமைத்து, ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தணிந்து, சமநிலையாகும். வாத நோயால் அவதிப்படுபவர்கள் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை அத்திக்காயைச் சமைத்துச் சாப்பிட்டுவந்தால், நோய் தணியும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் அத்திப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டுவந்தால் நிவாரணம் கிடைக்கும்.
ரத்தமூலம் சிலரை பாடாகப் படுத்தியெடுக்கும். இதனால் உடலிலுள்ள ரத்த அளவு குறைந்து பலவீனமாகி விடுவார்கள். இது ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், அத்திப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டுவந்தால் நலம் பெறலாம். அத்திப்பிஞ்சை சமைக்கும்போது காரம் சேர்க்காமல் சமைக்க வேண்டும்.
அத்திக்காயைப்போலவே அத்திப்பழமும் மருத்துவக் குணம் நிறைந்தது. இது செரிமானத்தைத் தூண்டும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளைச் சரிசெய்யும். வெள்ளைப்படுதலைத் தடுக்கும். ஆண்மையைப் பெருக்கும். தினம் ஒரு அத்திப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், ரத்த உற்பத்தி அதிகரித்து உடல் வளர்ச்சி அடையும். இதயநோய் வராமல் தடுத்து, சருமத்தின் அழகை இளமையாகப் பாதுகாக்க உதவும். நீரிழிவு, நீர்க்கட்டிகள், நமைச்சல், சொறி, சிரங்குப்  உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரக்கூடியது.
உலர்ந்த அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். அத்தியில் நார்ச்சத்துகள் அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், கொழுப்பைக் கரைக்கும். எனவே, எடையைக் குறைக்க நினைப்பவர் களுக்கு இது மிகவும் உகந்தது.

%d bloggers like this: