நன்மை சேர்க்கும் வௌ்ளை

சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில், எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பல நாட்டு வைத்தியங்களில், பூண்டுவின் பங்களிப்பு அதிகம். இதை வறுத்து சாப்பிடுவதை விட, வேக வைத்து அல்லது பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில், பூண்டு வைத்து தேய்த்தால், விஷம் பலவீனமடையும். பூண்டு சாறு, எலுமிச்சை சாறு கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால், நாளடைவில் தேமல் மறைந்து விடும்.
சீராகும் ரத்த அழுத்தம்


பூண்டு சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை நசுக்கி, சூப் வைத்து கொடுக்கலாம்; சளி தொந்தரவு இருந்தால், விலகிப் போகும். தொண்டை கரகரப்பாக இருந்தால், நான்கு பல் பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விட்டால், உடனே சரியாகும். பூண்டு, இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து, பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.
புற்றுநோய் செல்களை அழிப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள அலிசின் என்ற ஆன்டி ஆக்சிடன்ட், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரவு தூங்கும் முன், பூண்டு அரைத்து, மரு மீது பூசி வந்தால், நாளடைவில் மரு மறைந்து போகும்.
கெட்ட கொழுப்புகள் கரையும்
அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு. மூன்று வாரம் தொடர்ந்து, ஒரு நாளுக்கு, மூன்று பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், அலர்ஜி நீங்கும். பல் வலி வந்தால், ஒரு பல் பூண்டு கடித்து, அதன் ரசம் பட்டால், பல்வலி மறையும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலின் மெட்டாபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படுவதுடன், நமது உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைக்கிறது. இதிலுள்ள ஆன்டிபாக்டீரியல், ரத்த நாளங்களில் நுழைந்து, ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட செய்கிறது.
கொலஸ்ட்ரால் அளவு சீராக்கப்பட்டு, தமனிகளை சுத்தம் செய்கிறது. இதனால் இருதய நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது. எலும்புகளின் வலிமையை அதிகமாக்கி, உடலின் சோர்வுத் தன்மையை போக்குகிறது. அதிலும், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். பச்சையாக சாப்பிட்டால், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்னைகளும் நீங்கும். குறிப்பாக, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.
வெறும் வயிற்றில்…!
மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே, அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சையாக, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது. பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இருதய நோய் வருவது தடுக்கப்படும்.
வயிற்றில் புழுக்கள் இருந்தால், அதை வெளியேற்ற, பூண்டுவை, தினமும் பச்சையாக, வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, புழுக்களும் வெளியேறி விடும். ஆய்வுகளில், பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது சக்தி வாய்ந்த ஆன்டிபயாடிக்காக செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இவ்வளவு நன்மைகள் கொடுக்கும் பூண்டுவை, எப்படியாவது ஒரு வகையில், சேர்த்துக் கொள்ள வேண்டும்.

%d bloggers like this: