யாரைப்பற்றியும் கவலையில்லை… எங்கள் பாதையில் செல்கிறோம் – முதல்வர்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் நல்லதே நடக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மேடையில் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடுமையான வறட்சியிலும் மக்களுக்கு தவறாமல் குடிநீர் வழங்கப்படுவதாக கூறினார்.

 

நீட் தேர்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், எல்லாமே செய்திதாள்களில் வருகிறதே, உங்களுக்குத் தெரியுமே என்றார். தொடர்ந்து அவர், நீட் தேர்வில் நல்லதே நடக்கும் என்று கூறினார். யாரைப்பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை, நாங்கள் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று கூறினார். நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன முதல்வர், அரசை தொடர்ச்சியாக விமர்சிப்பது ஏன் என்று கமலிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

%d bloggers like this: